ரியல்மி நிறுவனம் தனது பட்ஜெட் ஸ்மார்ட் ஃபோனான Realme 10-ஐ இந்த வார தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மலிவு விலை 4G ஸ்மார்ட் ஃபோன் இப்போது இந்திய மார்க்கெட்டில் யூஸர்கள் வாங்க கிடைக்கிறது.நாட்டில் 5ஜி சர்விஸ் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த 4G ஸ்மார்ட்ஃபோன் AMOLED டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா மற்றும் SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய மிக பெரிய 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. இந்த புதிய Realme 10 4G மொபைலானது கிளாஷ் ஒயிட் மற்றும் ரஷ் பிளாக் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
இந்த புதிய மொபைலின் விலை மற்றும் சலுகைகள் : இந்தியாவில் Realme 10 மொபைல் 4GB ரேம் + 64GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு வேரியன்ட்களில் வருகிறது. 4GB + 64GB வேரியன்ட்டின் விலை ரூ.13,999, 8GB + 128GB வேரியன்ட்டின் விலை ரூ.16,999 முதல் தொடங்குகிறது. Flipkart மற்றும் realme.com உள்ளிட்டவற்றிலிருந்து இந்த புதிய டிவைஸை வாங்கும் போது ICICI டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு ரியல்மி நிறுவனம் ரூ.1,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்டை வழங்குகிறது. Flipkart Big Saving Days சேலின் ஒரு பகுதியாக இந்த புதிய Realme 10 4G ஸ்மார்ட் ஃபோனும் வாங்க கிடைக்கிறது.
ஸ்பெசிஃபிகேஷன்ஸ் : Realme 10 மொபைலானது 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 360Hz டச் சேம்ப்ளிங்க் ரேட்டுடன் கூடிய 6.4-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த மொபைலின் டிஸ்ப்ளே மேல் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 ப்ரொட்டக்ஷன் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்ஃபோன் MediaTek Helio G99 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 8GB வரை LPDDR4X ரேம் மற்றும் 256GB UFS2.2 ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ரியல்மி 10 மொபைலானது 50MP மெயின் கேமரா, 2MP B&W கேமரா மற்றும் LED ஃபிளாஷ் உள்ளிட்டவற்றை கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. வீடியோ கால்ஸ் மற்றும் செல்ஃபிக்களுக்காக இந்த மொபைலின் முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமராவை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்த வரை முன்பே கூறியது போல ஸ்மார்ட் ஃபோன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 5,000mAH பேட்டரியை கொண்டுள்ளது. இந்த மொபைலின் 5000mAh பேட்டரி 28 நிமிடங்களில் 0-50 சதவீதம் சார்ஜாகி விடும் என்று ரியல்மி நிறுவனம் கூறுகிறது.
ரியல்மி 10 4G மொபைலானது ஆண்ட்ராய்டு 12-அடிப்படையிலான Realme UI 3.0 உடன் இயங்கினாலும் வரவிருக்கும் மாதங்களில் Android 13 அப்டேட்டை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Realme 10 மொபைல் ஹை-ரெசல்யூஷன் ஆடியோவுடன் பிரத்யேக 3.5mm ஆடியோ ஜாக்-ஐ கொண்டுள்ளது. இந்த மொபைல் 178 கிராம் எடை & 7.95 மிமீ தடிமன் கொண்டுள்ளதால் பயன்படுத்தும் அனுபவத்தை எளிதாக்குகிறது. இந்த ஸ்மார்ட் ஃபோனில் ஸ்டோரேஜை விரிவாக்கம் செய்வதற்கான microSD card ஸ்லாட்டும் கொடுக்கப்பட்டு உள்ளது.