தவிர, மற்ற கட்டணங்களையும் அதிகரிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி யோசித்து வருவதாகத் தெரிகிறது. டெபிட் கார்டு அல்லது ப்ரீபெய்டு கார்டுகளின் வருடாந்திர கட்டணம் மற்றும் பராமரிப்பு கட்டணம் உயர்த்தப்படும் என தெரிகிறது. மேலும், பிஓஎஸ் மெஷின்கள் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் விதிக்கப்படும்.
மறுபுறம், ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியுற்று உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டால், ஒரு வாரத்திற்குள் பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்குத் திரும்பும். இல்லையெனில், வங்கியில் புகார் அளிக்கலாம். ஒரு மாதத்திற்குள் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், ரூ. 100 அபராதம் வங்கியால் உங்கள் அக்கவுண்டுக்கு செலுத்தப்படும்.