உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான மக்களின் ஆசையாக ஒன்று இருக்க முடியும் என்றால் அது தான் "சொந்த வீடு". ஆனால் எல்லோராலும் இந்த கனவை எளிதாக அடைய முடிவதில்லை. வங்கிகளில் வீட்டு கடன்களை விண்ணப்பிக்கும் எல்லோருக்கும் கடன் கிடைப்பதில்லை.இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை பார்க்கலாம். டெல்லியை சேர்ந்த ராகேஷ் குமார் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நொய்டாவில் சொந்த வீடு வாங்க முடிவு செய்து அதற்கு அட்வான்ஸ் செலுத்த கொஞ்சம் பணத்தை ஏற்பாடு செய்து, மீதி பணத்திற்கு ஹவுசிங் லோனுக்கு விண்ணப்பித்தார். அதிக சம்பளம் வாங்குபவராக இருந்த போதிலும் இவரது கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
நிலையற்ற வேலை : ஒருவரது வருமானம் என்பது அவர் பார்க்கும் வேலையை சார்ந்தது. வீட்டுக் கடனை சுமார் 10-15 ஆண்டுகளுக்கு திருப்பி செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் ஒருவரது வருமான ஆதாரம் நிலையானதாக இருக்க வேண்டும். எனவே கடன் வழங்கும் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் கடனுக்கு விண்ணப்பிப்பவரின் வேலையின் காலம் மற்றும் அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் நம்பகத்தன்மையையும் சரி பார்த்து விண்ணப்பதாரர் நிலையான வேலையில் தான் இருக்கிறாரா என்பதை உறுதி செய்வார்கள். இதில் சிக்கல் ஏற்பட்டால் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
கடன் சிக்கல்கள் : ஒருவரது கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால் (600-க்கும் குறைவாக இருந்தால்) அவருக்கு வீட்டு கடன் கிடைப்பது பிரச்சனையாக இருக்கலாம். ஒருவரது கிரெடிட் ஸ்கோர் 700-க்கும் மேல் இருப்பது கடன் வழங்கப்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். எனினும் நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருந்தாலும் கூட சில நேரங்களில் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். உதாரணமாக வழக்கமாக EMI செலுத்துவதில் செய்யப்படும் தாமதங்கள் கூட நிராகரிப்பிற்கு காரணமாகலாம்.
BankBazaar. com-ன் CEO ஆதில் ஷெட்டி பேசுகையில், வீட்டு கடன் பாதுகாப்பானது. எனவே இதன் ஒப்புதலுக்கு 2 அத்தியாவசிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். முதலாவதாக நிபந்தனை கடனை திருப்பிச் செலுத்த விண்ணப்பதாரருக்கு போதுமான வருமானம் இருக்க வேண்டும். இரண்டாவதாக வாங்க போகும் சொத்து சட்டப்பூர்வமானதாக, அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். வீட்டு கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், கடன் வாங்குபவர்கள் மீண்டும் அதற்கு விண்ணப்பிக்க முனைகிறார்கள். இது அவர்களின் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். உடனடியாக விண்ணப்பிப்பதற்கு பதில் என்ன செய்தால் கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு மேம்படும் என கண்டறிந்து அதனை சரி செய்து சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்கிறார்.
ப்ராப்பர்ட்டிக்கு அப்ரூவல் இல்லாதது : ஒருவர் வாங்க விரும்பும் ப்ராப்பர்ட்டி அரசால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளதா என்பதை முக்கியமாக சரி பார்க்க வேண்டும். சில நேரங்களில் ஹவுசிங் ப்ராஜக்ட்ஸ் அங்கீகரிக்கப்பட்டாலும் அதனுள் சில டவர்ஸ் அல்லது சில யூனிட்ஸ்கள் கட்ட அனுமதி இருக்காது. எனவே நீங்கள் ஒரு ப்ராப்பர்ட்டியை வாங்குவதற்கு முன் அதன் லொக்கேஷன் மற்றும் அப்ரூவல் பற்றி முழுமையாக அலசி ஆராய நினைவில் கொள்ளுங்கள்.
சொத்து மதிப்பீட்டில் சிக்கல்கள் : ஒருவர் ரீசேல் சொத்தை வாங்கும் போது சொத்தின் மதிப்பீடு வங்கியில் இருந்து உங்களுக்குத் தேவைப்படும் தொகையை விட குறைவாக இருக்கும் போது, அவரது வீட்டு கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம். பொதுவாக கடன் வழங்குபவர் சொத்தின் தற்போதைய மதிப்பைக் காட்டிலும் குறைந்த மதிப்பை தான் கடனாக வழங்குவார். கடன் வாங்கியவர் கடனை செலுத்தாத பட்சத்தில் கடன் வழங்கியவருக்கான ஆபத்தை குறைக்க இது உதவுகிறது.
கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் உடனடியாக மீண்டும் விண்ணப்பிப்பதற்கு பதில் ஃபினான்ஷியல் ப்ரொஃபைலில் காணப்படும் குறைகளை சரி செய்ய நேரம் எடுத்து கொள்ளுங்கள்.ஒரு சொத்தை வாங்க பில்டர் மற்றும் குறிப்பிட்ட சொத்து உட்பட பல விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும்.கிரெடிட் ஸ்கோரை 600-க்கும் குறைவாக வைத்திருப்பது கடன் பெறுவதை கடினமாக்கலாம்.