இந்தியா முழுவதும் பெரும்பாலான மக்களின் போக்குவரத்து தேவைகளை நிவர்த்தி செய்துக்கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்திய ரயில்வே நிர்வாகம். நெடுந்தூர பயணம் செய்ய வேண்டும் என்றாலும் குறைந்த செலவில் பயணம் செய்வதோடு எவ்வித இடையூறும் இருக்காது. ஆனால் பண்டிகைக் காலங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது என்பது பலருக்கு மிகவும் கடினமான பணியாக இருக்கும். இதுபோன்ற பிரச்சனைகளை சரி செய்யும் விதமாக இந்திய ரயில்வே தட்கல் டிக்கெட்டை பயணிகளின் வசதிக்காக அறிமுகம் செய்தது. இருந்தபோதும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்தாலும் சில நேரங்களில் இருக்கைகள் கிடைக்காது.
எனவே தான் இவற்றையெல்லாம் முழுமையாக சரி செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்திய ரயில்வே பிரீமியம் தட்கல் டிக்கெட் முன்பதிவு என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம் பயணிகள் தங்களுக்குத் தேவைப்படும் ரயில் பயணத்திற்குத் தேவையான டிக்கெட்டை 24 மணி நேரத்திற்கு முன்பே முன்பதிவு செய்யலாம். ஏசி வகுப்பிற்கு காலை 10 மணிக்கும், ஏசி இல்லாத ஸ்லீப்பர் வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கும் முன்பதிவு தொடங்குகிறது.
பிரீமியம் தட்கல் டிக்கெட் விலை ? : தட்கல் டிக்கெட் விலையை விட பிரீமியம் தட்கல் டிக்கெட்டின் விலை சற்று அதிகமாக இருக்கும். இரண்டாம் வகுப்புக்கான அடிப்படை கட்டணத்தில் 10 சதவீதமும், அனைத்து வகுப்பினருக்கும் அடிப்படை கட்டணத்திலிருந்து 30 சதவீதமும், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தட்கலிலிருந்து பிரீமியம் டிக்கெட் எவ்வாறு வேறுபடுகிறது : பிரீமியம் தட்கல் டிக்கெட்டை நீங்கள் இ- டிக்கெட்டுகளாக அதாவது ஆன்லைன் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. ஆப்லைனில் முன்பதிவு செய்வதற்கு இதில் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் வேறு எந்த சலுகையும் கிடைக்காது. இதோடு டிக்கெட் கன்பார்ம் ஆன பின் பிரீமியம் தட்கல் டிக்கெட்டை ஒரு வேளை ரத்து செய்யும் நிலை ஏற்பட்டால் உங்களது பணத்தைத் திரும்பப் பெற முடியாது. இருந்தப்போதும் ஆன்லைன் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான மற்ற அனைத்து விதிகளும் பிரீமியம் தட்கல் ஒதுக்கீட்டிற்கும் பொருந்தும் என இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரீமியம் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்முறை : அனைத்து ரயில்களுக்கும் சேவை கிடைக்காததால், பயணிகள் பிரீமியம் தட்கல் ரயில் அட்டவணையை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும் என்பதை முன்னதாக நினைவில் வைத்து கொள்ளவேண்டும்.ஆன்லைனில் பிரீமியம் தட்கல் டிக்கெட்டை நீங்கள் புக் செய்ய வேண்டும் என்றால், உங்களது ஐடி மற்றும் கடவுச்சொல்லை என்டர் செய்து IRCTC இணையத்திற்குள் செல்லவும்.
பின்னர் the book ticket பிரிவிற்குச் சென்று உங்களது பயண விபரங்களை நிரப்பவும். பயணத் தேதி போன்ற அனைத்து விபரங்களையும் என்ட்ரி செய்து submit கொடுக்க வேண்டும். இப்போது, ரயில்களின் பட்டியல் தோன்றும்.இதனையடுத்து பிரீமியம் தட்கல் டிக்கெட்டுடன் ரயிலைக் காண்பிக்கும் கோட்டா பகுதிக்கு அடுத்துள்ள “பிரீமியம் தட்கல்” விருப்பத்தை கிளிக் செய்யவும். இப்போது, குறைந்த கட்டணத்தில் ரயிலைத் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்ய வேண்டும்.