முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » ரூ.2000 நோட்டுகளை தபால் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா..? இதற்கான பதிலை இங்கே அறியலாம்..

ரூ.2000 நோட்டுகளை தபால் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா..? இதற்கான பதிலை இங்கே அறியலாம்..

தற்போதைய நிபந்தனைகளின்படி, இந்த செயல்முறையை வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் (RBI) 19 பிராந்திய அலுவலகங்களில் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படுகிறது.

 • 16

  ரூ.2000 நோட்டுகளை தபால் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா..? இதற்கான பதிலை இங்கே அறியலாம்..

  ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி, இனி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருக்க போவதில்லை என்றும், அதை ரிசர்வ் வங்கி திரும்ப பெற்று கொள்வதாகவும் அறிவித்திருந்தத்து. மேலும், இந்த 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றி கொள்வதற்கு கால அவகாசத்தையும் கொடுத்து, செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் மாற்றி கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டது. இதே போன்று, 2016 ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது.

  MORE
  GALLERIES

 • 26

  ரூ.2000 நோட்டுகளை தபால் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா..? இதற்கான பதிலை இங்கே அறியலாம்..

  அப்போதில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டது. இது மக்களுக்கு மிகப்பெரும் நெருக்கடியை கொடுத்திருந்தது. கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த நிலைப்பாட்டை ரிசர்வ் வங்கி எடுத்தாக கூறியிருந்தது.2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் மக்களுக்கு சில குழப்பங்கள் உள்ளன. வங்கிகளில் மட்டும்தான் இந்த நோட்டுகளை பெற்று கொள்வார்களா, அல்லது வேறு அரசு சார்ந்த நிலையங்களில் இதை பெற்று கொள்வார்களா என்றும், செப்டம்பர் 30 ஆம் தேதி வரை சாதாரண கடைகளில் இந்த 2000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாமா என்பது போன்ற பல்வேறு கேள்விகள் உள்ளன.

  MORE
  GALLERIES

 • 36

  ரூ.2000 நோட்டுகளை தபால் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா..? இதற்கான பதிலை இங்கே அறியலாம்..

  தற்போதைய நிபந்தனைகளின்படி, இந்த செயல்முறையை வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் (RBI) 19 பிராந்திய அலுவலகங்களில் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், தபால் நிலையங்களில் இந்த செயல்முறை தொடங்கவில்லை. எனினும், தபால் நிலையங்களில் இந்த 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வது என்பது சாத்தியமான விஷயமாக உள்ளது. இது போன்று 2000 ரூபாய் நோட்டுகளை தபால் நிலையங்களில் மாற்றி கொள்ள சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் சரிபார்க்கப்பட்ட கணக்கை (KYC) வைத்திருப்பது அவசியமாகும்.

  MORE
  GALLERIES

 • 46

  ரூ.2000 நோட்டுகளை தபால் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா..? இதற்கான பதிலை இங்கே அறியலாம்..

  இருப்பினும், மக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றக்கூடிய சிறப்புரிமை இந்திய ரிசர்வ் வங்கிக்கும், பிற வங்கிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதன்படி, 2000 ரூபாய் நோட்டுகளை மே 23, 2023 முதல் டெபாசிட் செய்யவோ அல்லது அதை மாற்றி கொள்ளவோ செய்யலாம். மேலும், செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டுமே இதை செய்ய முடியும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. எனவே, இந்த நோட்டுகளை மாற்ற விரும்புவோர் அருகில் உள்ள வங்கிக் கிளைகளுக்கு சென்று மாற்றி கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 56

  ரூ.2000 நோட்டுகளை தபால் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா..? இதற்கான பதிலை இங்கே அறியலாம்..

  2000 ரூபாய் நோட்டுகளை மாற்றக்கூடிய ஒரு நபர், ஒரு நாளைக்கு பத்து 2000 ரூபாய் நோட்டுகளை (அதாவது ரூ.20,000) எந்த வங்கியில் வேண்டுமானாலும் அல்லது ரிசர்வ் வங்கியில் மாற்றி கொள்ளலாம். மேலும், ஒரு நபர் தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு வேண்டுமானாலும் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்து கொள்ளலாம். இதற்கு வரம்பு ஏதும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 30, 2023 வரை இந்த நோட்டுகளை மாற்றி கொள்ள கூடிய காலக்கெடு இருப்பதால் மக்கள் அவசரப்படாமல் செயல்படுமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

  MORE
  GALLERIES

 • 66

  ரூ.2000 நோட்டுகளை தபால் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படுகிறதா..? இதற்கான பதிலை இங்கே அறியலாம்..

  இந்நிலையில், தபால் நிலையங்களில் அதிகாரபூர்வ KYC சரிபார்ப்பைக் கொண்ட கணக்குகளில் மட்டுமே, 2000 ரூபாய் டெபாசிட்களை ஏற்றுக்கொள்கின்றன. எனவே, மற்றவர்கள் தபால் நிலையங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளும் வசதி தற்போது கிடையாது.

  MORE
  GALLERIES