முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » ரூ.1400 ஒதுக்கினால் ரூ.35 லட்சம் பணம் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்!

ரூ.1400 ஒதுக்கினால் ரூ.35 லட்சம் பணம் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்!

Post Office Scheme : கிராம சுரக்‌ஷா திட்டம் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பில் சிறந்த திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. நீங்கள் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் ஈட்ட விரும்பினால், இந்தத் திட்டத்தை தாரளமாக தேர்ந்தெடுக்கலாம்.

 • 15

  ரூ.1400 ஒதுக்கினால் ரூ.35 லட்சம் பணம் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்!

  போஸ்ட் ஆபீஸ் சேமிப்பில் மக்களின் நலனுக்காக ஏகப்பட்ட திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அதில் ஒன்றான கிராம சுரக்‌ஷா யோஜனா திட்டம் குறித்து தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

  MORE
  GALLERIES

 • 25

  ரூ.1400 ஒதுக்கினால் ரூ.35 லட்சம் பணம் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்!

  கிராம சுரக்‌ஷா திட்டம் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பில் சிறந்த திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. நீங்கள் குறைந்த முதலீடு செய்து அதிக லாபம் ஈட்ட விரும்பினால், இந்தத் திட்டத்தை தாரளமாக தேர்ந்தெடுக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ், ஒருவர் மாதம் ரூ.1411 முதலீடு செய்யலாம் மற்றும் முதிர்வு காலத்தில் சுமார் ரூ.35 லட்சம் பெறலாம். எனவே, சிறு முதலீடு மூலம் லட்சக்கணக்கான வருவாயை பெறலாம். இது ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். கிராம மக்களுக்கானது. கிராமப்புற மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, பின்தங்கிய மக்களுக்கு உதவும் நோக்கில் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  MORE
  GALLERIES

 • 35

  ரூ.1400 ஒதுக்கினால் ரூ.35 லட்சம் பணம் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்!

  பாலிசியை எடுத்து ஐந்தாண்டுகளின் முடிவில் எண்டோமென்ட் அஷ்யூரன்ஸ் பாலிசியாக மாற்றுவதற்கான கூடுதல் அம்சமும் இதில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சேர வயது வரம்பு 19-55 ஆண்டுகள் ஆகும். இந்தத் திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கான பிரீமியங்களை ஒவ்வொரு மாதமும், காலாண்டும், ஆறு மாதம் மற்றும் ஆண்டு அடிப்படையில் செலுத்தலாம்.

  MORE
  GALLERIES

 • 45

  ரூ.1400 ஒதுக்கினால் ரூ.35 லட்சம் பணம் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்!

  19 வயது முதலீட்டாளர் 55 வயது வரை ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ய விரும்பினால் அதற்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1515 பிரீமியம் செலுத்த வேண்டும்.58 வயது வரை முதலீடு செய்ய விரும்பினால் ரூ.1463 டெபாசிட் செய்ய வேண்டும் மற்றும் 60 வயது வரை முதலீடு செய்ய வேண்டும் என்றால் ஒவ்வொரு மாதமும் பிரீமியமாக ரூ.1411 டெபாசிட் செய்ய வேண்டும்.இப்படி முதலீடு செய்யும் போது 55 வயதில் முதலீட்டாளர் ரூ.31.60 லட்சமும், 58 வயதில் ரூ.33.40 லட்சமும், 60 வயதில் முதிர்வுத் தொகையாக ரூ.34.60 லட்சமும் பெறுவார்கள்.

  MORE
  GALLERIES

 • 55

  ரூ.1400 ஒதுக்கினால் ரூ.35 லட்சம் பணம் கிடைக்கும்.. போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டம்!


  இதில் கடன் வசதி உட்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், திட்டத்தில் 4 ஆண்டுகள் முதலீடு செய்த பிறகு மட்டுமே கடன் கிடைக்கும்.அவசர காலங்களில், 30 நாட்கள் சலுகை காலம் அனுமதிக்கப்படுகிறது.முதலீடு செய்த நாளில் இருந்து, பாலிசியை 3 ஆண்டுகளுக்குப் பிறகு சரண்டர் செய்யலாம்.5 ஆண்டுகளுக்கு முன்பு சேமிப்பை மூடினால் போனஸுக்கு தகுதியில்லை

  MORE
  GALLERIES