போஸ்ட் ஆஃபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்ய நினைத்தால் அது ஒரு நல்ல முடிவாகும். வட்டியுடன் சேர்த்து முதலீட்டாளர்களுக்கு பல சலுகைகளையும் வழங்கப்படுகின்றன. குறிப்பாக அரசு வழங்கும் உத்தரவாதமும் போஸ்ட் ஆஃபீஸ் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு உண்டு. காலாண்டு அடிப்படையிலும் வட்டி பெறலாம். 5.5% வட்டி தொடங்குகிறது.
போஸ்ட் ஆஃபீஸ் திட்டத்தில் இருக்கும் நிலையான வைப்பு தொகை திட்டம் ஒரு நல்ல முதலீடாகும். இதில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், தபால் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அதைப் பற்றிய முழுமையான தகவலைப் பெற்று கொள்ளலாம். 1, 2, 3 மற்றும் 5 ஆண்டுகளுக்கு நிலையான வைப்புத்தொகையை போட நீங்கள் முடிவு எடுத்தால் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் தொடங்கலாம். 5 வருடத்திற்கு தேர்ந்தெடுத்தால் வரி சலுகையும் உண்டு.
அஞ்சல் சேமிப்பில் பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய நினைத்தால் அதற்கு முதலில் செய்ய வேண்டியது அக்கவுண்டை ஓபன் செய்வது. நேரடியாக சென்று பணம் செலுத்தியும் தொடங்கலாம் அல்லது ஆன்லைனிலும் தொடங்கலாம். குறைந்தபட்சம் 1000 ரூபாயை முதலீடு செய்து கணக்கை தொடங்கலாம். அதிகபட்ச தொகைக்கு உச்ச வரம்பு இல்லை.
பிக்சட் டெபாசிட் திட்டத்தில் கிடைக்கும் வட்டி குறித்து இப்போது பார்க்கலாம். 7 நாள் முதல் 1 வருடம் வரையிலான திட்டங்களுக்கு 5.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிற்அது. 1 வருடம் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான கால அளவுக்கும் அதே கிடைக்கும். இது தவிர, 3 வருடங்கள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு 6.70 சதவிகிதம் வட்டி கிடைக்கும்.
மொத்தத்தில் வங்கியை காட்டிலும் அஞ்சல் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு நல்ல வட்டி மற்றும் லாபம் கிடைக்கிறது. அதுவும் வரிச்சலுகையுடன். சமீபத்தில் பல முன்னணி வங்கிகளிலும் பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு வட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் பலரின் கவனமும் அஞ்சல் சேமிப்பு மீது திரும்பியுள்ளது. உங்கள் முடிவு என்ன?