2023-24-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1 புதனன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளில் போஸ்ட் ஆஃபிஸ் மன்த்லி ஸ்கீமிற்கான (POMIS) டெபாசிட் லிமிட் திருத்தப்பட்ட அறிவிப்பும் ஒன்றாகும். பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய அமைச்சர் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் (POMIS) அதிகபட்ச டெபாசிட் வரம்பை உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட் அறிவிப்பின்படி, அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் (POMIS) கீழ் சிங்கிள் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கான டெபாசிட் லிமிட் ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) என்றால் என்ன? : MIS என்பது அரசின் ஆதரவு பெற்ற குறைந்த ஆபத்துள்ள முதலீட்டு திட்டமாக இருக்கிறது . இந்த திட்டத்தின் கீழ் அக்கவுண்ட் ஓபன் செய்யும் ஒரு நபர் மாத வருமானத்தை வட்டி வடிவில் பெறுவார். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் வழக்கமான அடிப்படையில் நிர்ணயிக்கிறது. அந்த வகையில் ஜனவரி - மார்ச் 2023 காலாண்டிற்கான வட்டி விகிதம் 7.1%ஆக நிர்ணயித்துள்ளது மத்திய அரசு. போஸ்ட் ஆஃபிஸ் மாத வருமானம் திட்டத்தின் கீழ் அக்கவுண்ட்டை ஓபன் செய்ய விரும்பும் ஒருவர் அருகில் இருக்கும் தபால் அலுவலகத்திற்குச் சென்று காமன் அக்கவுண்ட் ஓபனிங் ஃபார்மை முதலில் நிரப்ப வேண்டும்.
MIS அக்கவுண்ட் ஓபன் செய்த ஒரு வருடத்திற்குப் பிறகு ஆனால் 3 ஆண்டுகளுக்கு முன்பு அக்கவுண்ட் க்ளோஸ் செய்தால் அக்கவுண்ட் ஹோல்டர் தான் முதலீடு செய்த அசல் தொகையில் 2% இழக்க நேரிடும். அக்கவுண்ட் ஓபன் செய்த நாளிலிருந்து 5 ஆண்டுகளுக்கு முன் மற்றும் 3 ஆண்டுகளுக்கு பிறகு அக்கவுண்ட்டை க்ளோஸ் செய்தால் வாடிக்கையாளர் முதலீடு செய்த அசல் தொகையில் 1% இழக்க நேரிடும்.