இந்த தேதிக்குள் ஆதார் எண் சமர்ப்பிக்கப்படாவிட்டால், உங்கள் சிறுசேமிப்பு முதலீடுகள் முடக்கப்படும். ஏனெனில் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஆதார் எண்ணை நிதி அமைச்சகம் கட்டாயமாக்கியுள்ளது. தற்போதுள்ள சிறுசேமிப்பு திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான ஆணை கடந்த மார்ச்சில் வெளியிடப்பட்டது.
அதாவது, " செப்டம்பர் 30, 2023க்குள் செய்து முடிக்க வேண்டும். அதன்படி, சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு பான் மற்றும் ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கியுள்ளது.
ஆறு மாதங்களுக்குள், அதாவது செப்டம்பர் 30, 2023க்குள், ஆதார் எண்ணை தபால் அலுவலகம் அல்லது வங்கிக் கிளையில் சமர்ப்பிக்காவிட்டால், சிறுசேமிப்பு முதலீடு முடக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.