சமீப காலமாக வங்கி சேமிப்பு கணக்குகளைக் காட்டிலும் பொதுமக்கள் அஞ்சல் சேமிப்பு திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.குறிப்பாக செல்வ மகள் சேமிப்பு திட்டம், பென்சன் திட்டங்கள் போன்றவை நல்ல லாபம் தருவதால் மக்களிடையே அஞ்சல் சேமிப்பு குறித்த ஆர்வம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லை, நண்பர்கள், உறவினர்கள் அனுபவத்தை பகிர அதன் மூலமாக கணக்கை தொடர்பவர்களும் அதிகரித்துள்ளனர். குறிப்பாக அஞ்சல் சேமிப்பில் நல்ல வட்டி கிடைப்பதும் வங்கியைக் காட்டிலும் லாபம் காண்பதும் உண்மை தான்.
இங்கு செயல்பாட்டில் இருக்கும் சிறுசேமிப்பு திட்டங்கள் பல, முதிர்வு தொகையில் லாபத்தை வாரி வழங்குகிறது. முதலீடு திட்டங்களும் வட்டியில் பொதுமக்களை கவர்கிறது. இந்திய தபால் துறை மாதாந்திர வருமானத் திட்டம் மட்டுமல்லாமல் பல சேமிப்புத் திட்டங்களை கொண்டுள்ளது. அவை, தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (போசோ), 5 ஆண்டு தபால் அலுவலகம் தொடர்ச்சியான வைப்பு கணக்கு (ஆர்.டி), தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு (TD), தபால் அலுவலக மாத வருமான திட்ட கணக்கு (எம்ஐஎஸ்), மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) உங்கள் வசதிக்கேற்ப திட்டத்தை தேர்ந்தெடுத்து சேமிப்புக் கணக்கை துவங்கி சேமிக்கலாம்.
அந்த வகையில் இன்று போஸ்ட் ஆஃபீஸில் செயல்பாட்டில் இருக்கும், வாடிக்கையாளரின் வரவேற்பு பெற்ற ஒரு முதலீடு திட்டம் குறித்து தான் பார்க்க போகிறோம். .மாதாந்திர வருமானத் திட்டம் குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இதோ. இந்த திட்டத்தில் தனிநபர் கணக்கில் அதிகபட்சமாக ரூ.4.5 லட்சமும், கூட்டுக் கணக்கில் (Joint account) அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரையும் சேமிக்க முடியும். நீங்கள் கணக்கு துவங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த திட்டத்தில் டிடிஎஸ் இல்லாததால், பிரிவு 80C கீழ் கிடைக்கும் நன்மைகள் இதில் கிடைக்காது. மேலும் இதில் கிடைக்கும் வட்டிகளுக்கு வரி உண்டு.
அதேபோல அந்த முதலீட்டு தொகை முதிர்ச்சி அடையும் வரை இந்தவட்டி தொகை வழங்கப்படும். வட்டி தொகையை நீங்கள் மாதந்தோறும் எடுக்காவிட்டாலும், வட்டித் தொகைக்கு கூடுதல் வட்டி வழங்கப்படாது.இந்திய தபால் துறையின் இணையள பக்கத்தையோ, அல்லது தபால் அலுவலகத்தையோ அணுகி மேலும் இதுக்குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.