பிஎம் கிசான் யோஜனா திட்டம் 2019 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட மிகச் சிறந்த திட்டமாகும். இது பிரதமர் நரேந்திர யின் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தால் நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற விவசாயிகள் பல வகையில் பயன்பெறுகின்றனர். மேலும், இந்த திட்டத்தில் ஏராளமான விவசாயிகள் ஆண்டுதோறும் பதிவு செய்து வருகின்றனர். இது விவசாயிகளுக்கு உதவக்கூடிய வகையில், ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாயை ஊக்கத்தொகையாக கொடுத்து வருகிறது.
இந்த ஊக்கதொகையானது மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. தற்போது இந்த பிரதான் மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள 14-வது தவணைக்காக இந்திய விவசாயிகள் காத்து வருகின்றனர். மிக விரைவில் இந்த ஆண்டு தவணையின் முழு ஊக்கத் தொகையையும் பெறலாம் என்று அறிவிப்புகள் வந்துள்ளன.
மேலும், சிலருக்கு இந்த திட்டத்தை குறித்து பரவலாக ஒரு சந்தேகம் உள்ளது. அதாவது, பிஎம் கிசான் யோஜனா திட்டத்தின் ஊக்கதொகையை கணவன் மனைவி இருவரும் பெற்று கொள்ள முடியுமா என்கிற சந்தேகம் பலருக்கும் உண்டு. இந்த கேள்வி இன்றளவும் பல பயனாளிகளிடம் இருந்து வருகிறது. அதே போன்று, விவசாயியாக உள்ள கணவன் மனைவி இருவரும் ஒவ்வொரு ஆண்டும் 6,000 ரூபாய் பெற்று கொள்ள முடியுமா என்கிற கேள்வியும் உள்ளது.
இதுகுறித்த விளக்கத்தை, மத்திய அரசானது தெளிவாக தந்துள்ளது. அதன்படி, பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் பலனானது ஒருவருக்கு மட்டும் வழக்கப்படவில்லை. அதாவது, இந்த திட்டத்தின் பலன் முழு குடும்பத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒரு குடும்பத்தில் உள்ள கணவன்-மனைவி இருவரும் ஊக்கத்தொகையை பெற பிஎம் கிசான் யோஜனா திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.
ஆனால், இந்த திட்டத்திற்கு இருவரும் விண்ணப்பிக்கும் போது, யாராவது ஒருவரது விண்ணப்பம் மட்டுமே அங்கீகரிக்கப்படும். ஒருவேளை, விண்ணப்பித்த இருவருக்கும் ஊக்கத்தொகை வந்துவிட்டால், யாராவது ஒருவர் அந்த தொகையை திருப்பி கொடுக்க வேண்டி இருக்கும்.எனவே, இந்த திட்டத்தில் குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவர் தான் பயன்படுத்த முடியும், ஒருவருக்கு மட்டும் தான் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஊக்கத்தொகையாக ரூ.6000 வழங்கப்படும். இந்த பிஎம் கிசான் யோஜனா திட்டம் பல்வேறு பயன்களைத் தருவதால், இந்திய விவசாயிகளுக்கு பல வகையில் உதவியாக உள்ளது. மேலும், இது போன்ற திட்டங்களை விவசாயிகள் அவ்வப்போது தெரிந்து கொண்டு பலனடைந்து வரலாம். இதுவரை இந்த திட்டத்தில் பதிவு செய்யாத விவசாயிகள், இன்றே இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து ரூ.6000 ஊக்கத்தொகையை பெற்று கொள்ளலாம்.