முதற்கட்டத்தில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் இந்த திட்டத்தின் தாக்கம் மிகவும் சாதகமானது. அதனைத்தொடர்ந்து, மீண்டும் ஐடி ஹார்டுவேர் துறைக்கு இத்திட்டத்தின் சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் இதற்கான ஒப்புதலை அளித்தது. ஐடி ஹார்டுவேர் உற்பத்தித் துறைக்கு ரூ.17,000 கோடி மதிப்பிலான உற்பத்தி இணைப்புச் சலுகைகளை மத்திய அரசு 6 ஆண்டுக் காலத்திற்கு அறிவித்துள்ளது.
மொபைல் போன் ஏற்றுமதியில் கடந்த ஆண்டு 10 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் இந்தியா 105 பில்லியன் டாலர் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. இப்போது இது மடிக்கணினிகள் மற்றும் பிற மேம்பட்ட கணினிகள் போன்ற சாதனங்களின் உற்பத்தியுடன் ஸ்மார்ட்போன் மற்றும் தொலைத்தொடர்பு உபகரணங்களின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது.