ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » புதிய கார் வாங்க திட்டமா..? இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

புதிய கார் வாங்க திட்டமா..? இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

சாலைகளின் நிலைமைகள், போக்குவரத்து அச்சுறுத்தல் மற்றும் அடிக்கடி நிகழும் விபத்துகள் காரணமாக உங்கள் வாகனத்தை சரியான பிளானுடன் இன்ஷூரன்ஸ் செய்வது நல்லது.

 • 16

  புதிய கார் வாங்க திட்டமா..? இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

  நீங்கள் புதிதாக கார் வாங்க திட்டமிட்டிருந்தால் கூடவே புதிதாக வாங்கும் காரை பாதுகாக்க மோட்டார் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுப்பது அவசியமாகிறது. தேவையற்ற அசம்பாவிதங்களில் இருந்து உங்கள் புதிய காரின் ஒட்டுமொத்த பாதுகாப்பை உறுதி செய்வதோடு, மன நிம்மதியையும் அளிக்கும்.இன்ஷூரன்ஸ் என்பது குறைந்த பிரீமியம் கட்டுவது பற்றியது மட்டுமல்ல சரியான அம்சங்கள் மற்றும் ஆட்-ஆன்ஸ்களை தேர்ந்தெடுப்பது மற்றும் கிளெய்ம் செட்டில்மென்ட்டை நேரடி காப்பீட்டாளரால் எளிதாக செய்து கொள்ள முடியும். எனவே கார் வாங்க திட்டமிட்டால் சரியான ஆட்டோ இன்ஷூரன்ஸ் பாலிசியை தேர்ந்தெடுக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

  MORE
  GALLERIES

 • 26

  புதிய கார் வாங்க திட்டமா..? இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

  இன்ஷூரன்ஸின் அவசியம் : சாலைகளின் நிலைமைகள், போக்குவரத்து அச்சுறுத்தல் மற்றும் அடிக்கடி நிகழும் விபத்துகள் காரணமாக உங்கள் வாகனத்தை சரியான பிளானுடன் இன்ஷூரன்ஸ் செய்வது நல்லது. அதேநேரம் இந்திய மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் இந்திய சாலைப் பாதுகாப்புச் சட்டப்படி அனைத்து கார் உரிமையாளர்களும் ஓராண்டு ஓன் டேமேஜ் இன்ஷூரன்ஸ், மூன்றாண்டு தேர்ட்-பார்ட்டி இன்ஷூரன்ஸ் வைத்திருப்பது கட்டாயம். ஓன் டேமேஜ் இன்ஷூரன்ஸானது விபத்து, இயற்கை சீற்றங்கள், மனிதர்களால் ஏற்படும் பேரழிவுகள், தீ போன்றவற்றில் வாகனம் சேதமடைந்தால் ஒரு கவசமாக இருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 36

  புதிய கார் வாங்க திட்டமா..? இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

  டீலர் சொல்வதை கேட்டாலும்... கார் டீலர்கள் காருடன் இன்ஷூரன்ஸையும் விற்பது பழைய வழக்கம். டீலர்கள் இன்ஷூரன்ஸ் செலவை காரின் ஒட்டுமொத்த விலையில் சேர்த்து விடுவார்கள். நாட்டில் எந்த சட்டமும் டீலரிடமிருந்து மட்டுமே இன்ஷூரன்ஸ் வாங்க சொல்லவில்லை. காப்பீட்டாளரிடம் இருந்து நேரடியாக இன்ஷூரன்ஸ் பிளான் வாங்குவது அதில் உள்ள தேவையற்ற பாலிசிகளுக்கு நீங்கள் பணம் செலுத்துவதில்லை என்பதையும், பிரீமியம் செலவில் 20% வரை சேமிப்பதற்கும் உத்தரவாதம் அளிக்கிறது.

  MORE
  GALLERIES

 • 46

  புதிய கார் வாங்க திட்டமா..? இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

  கிளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் : ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை அளவிட ஒரு முக்கியமான அளவுகோலாக கிளெய்ம் செட்டில்மென்ட் விகிதம் உள்ளது. இன்ஷூரன்ஸ் நிறுவனம் இழப்பை எப்படி ஈடு செய்கிறது என்பதை புரிந்து கொள்ள, நிறுவனத்தின் கடந்தகால செயல்திறனை தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் உரிமைகோரல் தீர்வு விகிதத்தின் தரவை காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிடுகிறது. இந்த விகிதத்தை பார்த்து குறிப்பிட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் கிளெய்ம் செட்டில்மென்ட் பற்றி புரிந்து கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 56

  புதிய கார் வாங்க திட்டமா..? இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

  IDV-ஐ செக் செய்யவும் : இன்ஷூய்ர்ட் டிக்ளர்ட் வேல்யூ (Insured Declared Value) என்பது காப்பீட்டாளரால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச இன்ஷூரன்ஸ் தொகையாகும். IDV என்பது வாகனம் திருடப்பட்டால் அல்லது வாகனம் பழுதுபார்க்க முடியாத அளவுக்கு கடும் சேதத்தை சந்தித்தால் உங்களுக்கு காப்பீட்டாளர் செலுத்தும் தொகையாகும். ஆட்டோமொபைலின் சந்தை மதிப்புடன் IDV-ஐ குழப்பி கொள்ள கூடாது. இன்ஷுரன்ஸ் செய்யும் போது சொத்தின் உரிமையாளரால் IDV அறிவிக்கப்படுகிறது. அதிக IDV, அதிக பிரீமியமை ஈர்க்கிறது.

  MORE
  GALLERIES

 • 66

  புதிய கார் வாங்க திட்டமா..? இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!

  கிளெய்ம் செட்டில்மென்ட் ப்ராசஸ் : இன்ஷூரன்ஸ் பாலிசியை வைத்திருப்பது இக்கட்டான நேரங்களில் ஆதரவுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. எனவே சேதம் ஈடுசெய்யப்படும் மற்றும் அனுபவம் தொந்தரவு இல்லாமல் வசதியாக இருக்கும் என்பதை உறுதியாக நம்பலாம். நியூ-ஏஜ் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கிளெய்ம் செட்டில்மென்ட்டின் ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பில் இருக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் நேரம் வீணாகாமல் பார்த்து கொள்கின்றனர். காரை வாங்கும் போது வாகனத்திற்கு வழங்கப்படும் அதே முக்கியத்துவம் ஆட்டோ இன்ஷூரன்ஸை வாங்கவும் கொடுக்கப்பட வேண்டும். மேலும் கார் இன்ஷூரன்ஸ் மற்றும் பாலிசியுடன் தொடர்புடைய பிற அம்சங்களின் அவசியத்தைப் புரிந்து கொள்வதும் முக்கியம்.

  MORE
  GALLERIES