கடன் பெறூவதற்கான நம்முடைய ஆவணங்கள் அனைத்தையும் சரியாக கொடுத்தாலும் ஒரு மாதத்திற்கு மேலாக வாடிக்கையாளர்களை வங்கி நிர்வாகம் அலைய விடுகிறது. இதனால் நேரம் வீணடிக்கப்படுகிறது. இனிமேல் இந்த கவலை வேண்டாம். இன்றைக்கு உள்ள மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் தடையில்லாத டிஜிட்டல் வளர்ச்சியால், ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் எந்த நேரத்தில் வங்கி சேவையை அணுகி எளிதாக கடன்களைப் பெற முடியும். இதனால் தான் மக்கள் மத்தியில் டிஜிட்டல் தனி நபர் கடன்கள் பிரபலமாகி வருகிறது. எனவே இந்நேரத்தில் எப்படி இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்திக் கடன்களைப் பெற முடியும் மற்றும் என்னென்ன நன்மைகள் உள்ளது? என்பது குறித்து இங்கே தெரிந்துக் கொள்வோம்.
டிஜிட்டல் கடன்கள் நேரத்தையும் முயற்சியையும் எவ்வாறு மிச்சப்படுத்துகிறது? வங்கிக்கு சென்று நேரடியாக கடன்களைப் பெறுவதை விட ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் போது ஏராளமான நன்மைகள் உள்ளது. ஆம் ஒவ்வொருவரின் கடன் தேவைகள் என்பது மாறுபடும். சிலருக்கு 10,000 தேவைப்படலாம், ஒரு சிலருக்கு பல லட்சங்கள் தேவைப்படலாம். இவற்றை நேரடியாக வங்கியில் பெறும் போது நாம் கோரிக்கை வைப்பது சிரமம். ஆனால் ஆன்லைன் வாயிலாக ரூபாய் 5000 முதல் ரூபாய் 5 லட்சம் வரை நாம் கடன் தொகையைப் பெற்றுவிடமுடியும்.
விரைவான தகுதிச் சோதனைகள் : தற்போது ஒவ்வொரு வங்கிகளும் அதற்கென்று ஒரு மொபைல் பேங்கிங் மற்றும் இன்டர்நெட் பேங்கிங் வசதியைக் கொண்டுள்ளது. இவற்றின் மூலம் தான் நாம் கடன்கள் பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும். இதில் நம்முடைய பேங்க் ஸ்டேட்மென்ட் மற்றும் ஆதார் மற்றும் பான் விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். நாம் எந்த வங்கியில் கடன்களைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கிறோமோ? அந்த வங்கிகளில் நம்முடைய விபரங்களைச் சரிபார்க்கத் தொடங்கும். இதற்கென்று பல மணி நேரம் எடுத்துக்கொள்ளாது. இரண்டு நிமிடங்கள் தான்.. நீங்கள் கடன் பெற தகுதியுடையவர்களா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளமுடியும்.