டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு பிறகு இந்தியாவில் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகள் மிகவும் அதிகரித்துள்ளன. யுபிஐ எனப்படும் பணபரிமாற்ற வசதியின் மூலம் உடனுக்குடன் எந்தவித கூடுதல் கட்டணமுமின்றி பண பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். கூகுள் பே, போன் பே, அமேசான் பே, பேடிஎம் போன்ற செயலிகள் யுபிஐ பணப்பரிவர்த்தனை செய்வதில் முன்னிலையில் உள்ளன. இதன் மூலம் நாம் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பவும் பெறவும் முடியும். அதேபோல மொபைலுக்கு ரீசார்ஜ் செய்து கொள்வது, கேபிள் ரீசார்ஜ், கேஸ் சிலிண்டர் கட்டணம், மின் கட்டணம், தங்க நகை கடன் உட்பட அனைத்து விதமான சேவைகளையும் நாம் இந்த யுபிஐ செயலியின் மூலம் பெற முடியும்.
ஆனால் எப்படி டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணப்பரிமாற்றம் செய்யும்போது அதற்கென ஒரு குறிப்பிட்ட வரையறை உள்ளதோ, அதுபோலவே யுபிஐ மூலமும் பணப்பரிமாற்றம் செய்வதற்கு குறிப்பிட்ட வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின் படி ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை யுபிஐ மூலம் பரிமாற்றம் செய்ய முடியும். அந்த வகையில் என்னென்ன செயல்களில் எவ்வளவு பண பரிமாற்ற வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்பவை பின்வருமாறு
பேடிஎம் : பேடிஎம் செயலியிலும் ஒரு நாளைக்கு ஒரு லட்சத்திற்கு மேல் யுபிஐ முறையில் பணப்பரிமாற்றம் செய்ய இயலாது. இதைத் தவிர பேடிஎம் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும்போது ஒரு மணி நேரத்திற்கு 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பண பரிமாற்றம் செய்ய இயலும். ஒரு மணி நேரத்திற்கு 5 பண பரிமாற்றங்களை மட்டுமே செய்ய முடியும் என்பதும் ஒரு நாளைக்கு 20 பண பரிமாற்றங்களை செய்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.