பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முன்னதாக, இந்த நடவடிக்கையை பூர்த்தி செய்வதற்காக மத்திய அரசு வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், சில நிபந்தனைகளுடன் காலக்கெடு இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உங்கள் பான் கார்டுடன் தொடர்புடைய பரிவர்த்தனைகள் முடக்கி வைக்கப்படும். நீங்கள் தாக்கல் செய்த வருமான வரி கணக்கு அறிக்கைகளும் பரிசீலனை செய்யப்படாது. இதுகுறித்து இந்திய வருமான வரித்துறை டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “வருமான வரிச் சட்டம் 1961இன் படி, அனைத்து பான் அட்டை வாடிக்கையாளர்களும் 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னதாக, அதை ஆதார் அட்டையுடன் இணைத்திருக்க வேண்டும். சிறப்புச் சலுகையாக விலக்கு பெற்றவர்களுக்கு மட்டும் இந்தக் கெடு பொருந்தாது.
எவ்வளவு அபராதம் : 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதியின் காலக்கெடுவை தவற விட்ட நிலையில், அதே ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரையில் இணைத்தவர்களிடம் ரூ.500 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு இணைத்தவர்கள் மற்றும் இனி மார்ச் 31ஆம் தேதி வரையில் ஆதார் எண் இணைக்க உள்ளவர்கள் ரூ.1000 அபாரதம் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் ஆதார் எண் இணைப்பது எப்படி : வருமான வரி இணையதளத்தில் : முதலில் https://www.incometax.gov.in/iec/foportal/ தளத்திற்கு செல்லவும்.லிங்க் ஆதார் என்ற மெனுவை கிளிக் செய்து, குயிக் லிங்க்ஸ் என்பதை தேர்வு செய்யவும்.இதையடுத்து, அடுத்த தளத்திற்கு ரீடாரக்ட் செய்யப்படுவீர்கள். இங்கு பான் எண், ஆதார் எண் மற்றும் இதர விவரங்களை குறிப்பிட்டு அப்டேட் செய்யவும்.