BNPL கார்டுகள் கிரெடிட் கார்டுகளுக்கு மாற்றாக நாளுக்கு நாள் பிரபலமடைந்து வருகின்றன. தனிநபர் கடனுடன் ஒப்பிடும் போது, BNPL திட்டத்தின் கீழ் எந்த வட்டியும் விதிக்கப்படாது. நீங்கள் அதை மொத்த தொகையாக செலுத்தலாம் அல்லது EMI-க்கள் மூலம் செலுத்தலாம். இப்போது buy now pay later ஆப்ஷனுக்கான பல விருப்பங்கள் உள்ளன. BNPL என்பது ஒரு புதிய மற்றும் வளர்ந்து வரும் கடன் வசதி ஆகும். குறிப்பாக கிரெடிட் கார்டு உங்களிடம் இல்லை என்றால் இது ஸ்மால் மற்றும் மீடியம் சைஸ் பர்ச்சேஸ்களை செய்ய உங்களை அனுமதிக்கிறது, மிகவும் பிரபலமான BNPL கார்டுகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
கேஷ்இ (CashE): மார்க்கெட்டில் கிடைக்கும் எளிமையான BNPL கார்டுகளில் ஒன்றான CashE, 2-ஸ்டெப் அக்கவுண்ட் ஆக்டிவேஷன் ப்ராசஸ் மூலம் கிரெடிட் லிமிட்டை செட் செய்ய உதவுகிறது. எளிய ஆப்-ல் நீங்கள் இந்த கார்டை நிர்வகிக்கலாம், இது உங்கள் ஆன்லைன் பர்ச்சேஸ்கள் அனைத்தையும் சிங்கிள் டேப்-ல் முடிக்க உதவுகிறது. ஷாப்பிங் செய்ய இது உங்களுக்கு ரூ.4 லட்சம் வரை கடனை வழங்குகிறது, மேலும் ஆயிரக்கணக்கான லோக்கல் மெர்சென்ட்ஸ்களுடன் இணைக்க இந்த ஆப் உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் ஒரு மாதத்திற்கு 2 பில்லிங் சைக்கிள்ஸ்களில் தொகையை எளிதாக திருப்பி செலுத்தலாம் அல்லது 3 மாதங்கள் - 1.5 ஆண்டுகள் வரையிலான EMI-க்களை தேர்வு செய்யலாம். இந்த கார்டுக்கான கடன் திட்டம் கிரெடிட் ஸ்கோரில் ஹை வேல்யூவை கொண்டிருக்கவில்லை, எனவே இது மோசமான கிரெடிட் உள்ளவர்களும் நிதியுதவி பெற அனுமதிக்கிறது.
ஜெஸ்ட் மணி (Zest Money): ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான BNPL பிளாட்ஃபார்மாக இருப்பது Zest Money. நாடு முழுவதும் 1.5 லட்சத்திற்கும் அதிகமான கடைகளுடன் Zest Money செயல்படுகிறது. ரூ.2 லட்சம் வரை கிரெடிட் லிமிட்ஸ்களை வழங்குகிறது. இது சில நிமிடங்களில் அக்கவுண்ட் ஓபன் செய்து உடனடி கிரெடிட் லிமிட் ஒப்புதலை பெற யூஸர்களை அனுமதிக்கிறது. கிரெடிட் கார்டை பயன்படுத்தாமல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனிலும் ஆப்ஸின் உதவியுடன் ஷாப்பிங் செய்ய இது உதவுகிறது. பர்ச்சேஸ்களுக்கு 0% EMI-யையும் வழங்குகிறது. முன்கூட்டியே அல்லது பகுதியளவு கட்டணம் செலுத்தினால் அபராதம் ஏதுமின்றி நீங்கள் 3-4 மாதங்களில் தொகையை திருப்பி செலுத்தலாம்.
அமேசான் பே லேட்டர் (Amazon Pay Later): அமேசான் பே லேட்டர் பெரும்பாலான இந்திய யூஸர்களலால் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது அனைத்து தகுதி வாய்ந்த Amazon App மற்றும் Amazon பிரவுசர் பர்ச்சேஸ்களுக்கு எளிய மற்றும் தொந்தரவு இல்லாத EMI பேமென்ட்ஸ் ஆப்ஷன்களை வழங்குகிறது. Amazon Pay Later மூலம் பேமென்ட்ஸ், ட்ரான்ஸ்ஸாக்ஷன், லிமிட்டேஷன்ஸ் உள்ளிட்டவற்றை கண்காணிக்கலாம் மற்றும் தனி டாஷ்போர்டுகளை உருவாக்குவதன் மூலம் உங்கள் அக்கவுண்ட்டை மேனேஜ் செய்யலாம். உங்கள் கிரெடிட் லிமிட் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டால் தீர்மானிக்கப்படுகிறது. கடன் தொகையை 3-12 மாத EMI-க்கள் மூலம் திருப்பி செலுத்தலாம்.
லேஸிபே (LazyPay): யூஸர்கள் மத்தியில் LazyPay பிரபலமாக இருக்க காரணம் யூஸர்கள் மெர்ச்சென்ட் லொகேஷன்களில் UPI-ஐ பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கிறது. இதன் மொபைல் ஆப்-ஐ பயன்படுத்தி, நீங்கள் ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் ஷாப்பிங் செய்யலாம். Zomato, Tata Sky, MakeMyTrip, Dunzo, GoIBIBO, BB Now போன்ற பிரபலமான மெர்ச்சென்ட்ஸ்களால் LazyPay ஏற்று கொள்ளப்படுகிறது. பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை ஆவணமாக பயன்படுத்தி LazyPay-வை பயன்படுத்தலாம். தொகையை 15 நாட்களில் அல்லது 3, 6, 9 அல்லது 12 மாதங்களின் EMI-க்கள் மூலம் திருப்பி செலுத்தலாம்.
ஃபிளிப்கார்ட் பே லேட்டர் (Flipkart Pay Later): Flipkart Pay later டவுன் பேமென்ட் செலுத்தாமல் ஆன்லைனிலும், கடைகளிலும் வாங்குவதற்கு இது யூஸர்களுக்கு உதவுகிறது. யூஸர்கள் 30 நாட்களுக்குள் நிலுவை தொகையை செலுத்த வேண்டும். Flipkart Pay later சிறந்த ஆப் யூஸர்களுக்கு ரூ.1 லட்சம் வரை இன்ஸ்டன்ட் கிரெடிட்டை வழங்குகிறது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளில் Try Now Buy Later ஆப்ஷனை வழங்குகிறது, இதில் நீங்கள் குறிப்பிட்ட தயாரிப்பைப் பெற்று பயன்படுத்திய பிறகு பணம் செலுத்தலாம்.