முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » மினிமம் பேலன்ஸ் அபராதம் , எஸ்.எம்.எஸ். கட்டணம் கிடையாது - எஸ்.பி.ஐ அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி

மினிமம் பேலன்ஸ் அபராதம் , எஸ்.எம்.எஸ். கட்டணம் கிடையாது - எஸ்.பி.ஐ அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி

 • News18
 • 110

  மினிமம் பேலன்ஸ் அபராதம் , எஸ்.எம்.எஸ். கட்டணம் கிடையாது - எஸ்.பி.ஐ அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி

  சேமிப்பு வங்கிக்கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படாது என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 210

  மினிமம் பேலன்ஸ் அபராதம் , எஸ்.எம்.எஸ். கட்டணம் கிடையாது - எஸ்.பி.ஐ அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி

  நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ, 21,959 கிளைகளை நாடு முழுவதும் வைத்துள்ளது. மேலும், 31 லட்சம் கோடி ரூபாயை வாடிக்கையாளர்கள் இந்த வங்கியில் டெபாசிட் செய்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 310

  மினிமம் பேலன்ஸ் அபராதம் , எஸ்.எம்.எஸ். கட்டணம் கிடையாது - எஸ்.பி.ஐ அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி

  எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைப்பு வைக்க வேண்டும். மெட்ரோ நகரங்கள், நகர்ப்புறங்கள், புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் என தனித்தனியே இந்தக் கட்டாய மினிமம் பேலன்ஸ் தொகை மாறுபடும். குறிப்பிட்ட தொகை இல்லாத கணக்குகளுக்கு அபராதக் கட்டணத் தொகையும் வசூலிக்கப்படும்.

  MORE
  GALLERIES

 • 410

  மினிமம் பேலன்ஸ் அபராதம் , எஸ்.எம்.எஸ். கட்டணம் கிடையாது - எஸ்.பி.ஐ அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி

  மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் குறைந்தபட்சம் 3,000 ரூபாயை தங்களது எஸ்பிஐ கணக்கில் மினிமம் பேலன்ஸ் ஆக வைத்திருக்க வேண்டும். புறநகர்ப் பகுதிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு 2,000 ரூபாய் மினிமம் பேலன்ஸ் ஆக இருக்க வேண்டும். கிராமப்புறங்களில் உள்ளோர் 1,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 510

  மினிமம் பேலன்ஸ் அபராதம் , எஸ்.எம்.எஸ். கட்டணம் கிடையாது - எஸ்.பி.ஐ அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி

  மெட்ரோ மற்றும் நகர்ப்புறங்களில் வசிப்போர் மினிமம் பேலன்ஸ் வைக்கத் தவறினால் அதிகப்பட்சமாக 15 ரூபாய்+ ஜிஎஸ்டி, புறநகர்ப்புறங்களில் உள்ளோர் தவறினால் அதிகப்பட்சமாக 12 ரூபாய் +ஜிஎஸ்டி மற்றும் கிராமப்புறங்களில் உள்ளோருக்கு அதிகப்பட்சமாக 10 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 610

  மினிமம் பேலன்ஸ் அபராதம் , எஸ்.எம்.எஸ். கட்டணம் கிடையாது - எஸ்.பி.ஐ அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி

  மாதம்தோறும் விதிக்கப்படும் அபராதத்தொகையால் வங்கி மீது வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்துக்கொண்டே இருந்தனர். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஒருபக்கம் அரசு ஊக்குவித்து வரும் நிலையில், இப்படி குறைந்தபட்ச தொகை இல்லையென்றால் அபராதம் விதிப்பது, வாடிக்கையாளர்களின் சேமிப்பு பழக்கத்தை குறைக்கும் என்றும் கூறப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 710

  மினிமம் பேலன்ஸ் அபராதம் , எஸ்.எம்.எஸ். கட்டணம் கிடையாது - எஸ்.பி.ஐ அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி

  இந்த நிலையில், சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்காவிடில் அபராதம் விதிக்கப்படாது என்று வங்கி இன்று அறிவித்துள்ளது. இன்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், எஸ்.எம்.எஸ் சேவைக்கான கட்டணத்தையும் எஸ்.பி.ஐ ரத்து செய்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 810

  மினிமம் பேலன்ஸ் அபராதம் , எஸ்.எம்.எஸ். கட்டணம் கிடையாது - எஸ்.பி.ஐ அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி

  வங்கியின் இந்த அறிவிப்பு வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அபராதத்தொகை மூலம் கோடிகளை அள்ளிய வங்கி திடீரென, அபராதம் விதிப்பதை ரத்து செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 910

  மினிமம் பேலன்ஸ் அபராதம் , எஸ்.எம்.எஸ். கட்டணம் கிடையாது - எஸ்.பி.ஐ அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி

  மேலும், 1 லட்சத்திற்கு குறைவான டெபாசிட் தொகைக்கும், அதற்கு மேலான டெபாசிட் தொகைக்கும் 3 சதவிகிதம் என்று ஒரே வட்டி சதவிகிதத்தை கடைப்பிடிக்க இருப்பதாகவும் எஸ்.பி.ஐ அறிவித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 1010

  மினிமம் பேலன்ஸ் அபராதம் , எஸ்.எம்.எஸ். கட்டணம் கிடையாது - எஸ்.பி.ஐ அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சி

  சமீபத்தில் யெஸ் வங்கியை மீட்டெடுக்கும் விதமாக அதில் முதலீடு செய்வதாக ஸ்டேட் வங்கி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES