10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரங்களில் 2027ஆம் ஆண்டுக்குள் டீசல் வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்று அந்த குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. இவற்றுக்குப் பதிலாக மின்சாரம் மற்றும் எரிவாயு அடிப்படையிலான வாகனங்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மின்சார வாகனங்களுக்கு மாறும் வரை மாற்று எரிபொருளாக சிஎன்ஜி பயன்படுத்தப்பட வேண்டும். பெட்ரோல் அல்லது டீசல் இன்ஜின்களால் இயக்கப்படும் பைக்குகள், ஸ்கூட்டர்கள் மற்றும் டிரைசைக்கிள்களும் படிப்படியாக தடை செய்யப்பட வேண்டும். இவற்றுக்கு பதிலாக மின்சார வாகனங்களை ஊக்குவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது