ஆன்லைன் வங்கி சேவையில் NEFT மூலமாக பணம் அனுப்பினால் பரிவர்த்தனை முழுமை பெற குறைந்தது 30 முதல் 1 மணி நேரமாவது ஆகும். பணப் பரிவர்த்தனை வரம்பு, வங்கிகளைப் பொருத்து மாறுபடும். வங்கி வேலை நேரங்களில் மட்டுமே NEFT மூலமாக பணம் பரிவர்த்தனையைச் செய்ய முடியும். பரிவர்த்தனைகளுக்குக் குறைந்தது 2.5 முதல் 25 ரூபாய் வரை கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
IMPS சேவையில் பணம் அனுப்பினால் சில நிமிடங்களில் பரிவர்த்தனை முழுமை பெறும். அதிகபட்சம் ஒரு நாளைக்கு 2 லட்ச்ம ரூபாய் வரையில் மட்டுமே IMPS சேவையில் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும். 24 மணி நேரமும் பணம் பரிவர்த்தனை செய்ய முடியும். குறைந்தது 5 முதல் 15 ரூபாய் வரை பரிவர்த்தனை கட்டணம் செலுத்த வேண்டும்.