முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » ஏப்ரல் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்.. சிலிண்டர், பெட்ரோல் விலை லிஸ்டில் இடம்பெறுமா?

ஏப்ரல் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்.. சிலிண்டர், பெட்ரோல் விலை லிஸ்டில் இடம்பெறுமா?

April 1 : ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில் பல மாற்றங்களை இந்த நிதியாண்டு கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • 18

  ஏப்ரல் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்.. சிலிண்டர், பெட்ரோல் விலை லிஸ்டில் இடம்பெறுமா?

  விலை ஏறப்போகும் பைக், கார்கள்:
  ஏப்ரல் 1ஆம் தேதி முதல், வர்த்தக வாகனங்களின் விலையை 2 முதல் 5 சதவீதம் வரை உயர்த்துவது என்று டாடா மோட்டார்ஸ், மாருதி சுஜுகி, ஹோண்டா, ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

  MORE
  GALLERIES

 • 28

  ஏப்ரல் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்.. சிலிண்டர், பெட்ரோல் விலை லிஸ்டில் இடம்பெறுமா?

  டோல்கேட் கட்டணம் : தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஏப்.1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.இதற்கான ஆவணப் பணிகள் எல்லாம் நடந்து வருகிறது. கட்டண உயர்வு குறித்து அறிக்கையை நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் மார்ச் 25-ம் தேதி தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சமர்ப்பிக்க உள்ளது. அமைச்சகம் அனுமதியளித்ததும் ஏப்.1 முதல் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 38

  ஏப்ரல் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்.. சிலிண்டர், பெட்ரோல் விலை லிஸ்டில் இடம்பெறுமா?

  சிலிண்டர் விலை:
  இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி ஏப்ரல் 1ம் தேதி எரிவாயு சிலிண்டர் விலையில் ஏதேனும் மாற்றம் வரலாம்

  MORE
  GALLERIES

 • 48

  ஏப்ரல் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்.. சிலிண்டர், பெட்ரோல் விலை லிஸ்டில் இடம்பெறுமா?

  பெட்ரோல், டீசல் விலை:
  தினம் தினம் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும் கடந்த 312 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரே விலை நீடிக்கிறது. இந்நிலையில் நிதியாண்டு தொடக்கம் பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றத்தை கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

  MORE
  GALLERIES

 • 58

  ஏப்ரல் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்.. சிலிண்டர், பெட்ரோல் விலை லிஸ்டில் இடம்பெறுமா?

  31க்குள் செய்ய வேண்டியது:
  திருத்தப்பட்ட வருமான வரித்தாக்கல்
  2019-20ம் நிதியாண்டுக்கான வருமான வரித்தாக்கல் விவரங்களில் திருத்தங்களை மேற்கொள்ள, திருத்தப்பட்ட படிவத்தை தாக்கல் செய்வதற்கு வரும் 31ம் தேதியே கடைசி நாளாகும். அதன்பின்ன படிவத்தை தாக்கல் செய்ய முடியாது

  MORE
  GALLERIES

 • 68

  ஏப்ரல் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்.. சிலிண்டர், பெட்ரோல் விலை லிஸ்டில் இடம்பெறுமா?

  முன்கூட்டி வரி செலுத்துதல்
  குறிப்பிட்ட நிதியாண்டில் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான வரி செலுத்த வேண்டிய நபர்கள் முன்கூட்டியே குறிப்பிட்ட வரித்தொகையை செலுத்த வேண்டியது அவசியம். அதன்படி 31ம் தேதிவரை முன்கூட்டிய வரியை செலுத்தலாம். அதன் பிறகு வரி செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும்

  MORE
  GALLERIES

 • 78

  ஏப்ரல் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்.. சிலிண்டர், பெட்ரோல் விலை லிஸ்டில் இடம்பெறுமா?

  12பி படிவம்
  நடப்பு நிதியாண்டு தொடங்கிய பின்பு வேறு நிறுவனத்தில் பணியில் இணைந்திருந்தால் புதிய நிறுவனத்தில் 12பி படிவத்தை தாக்கல் செய்வது கட்டாயம். அந்த படிவம் பழைய நிறுவனத்தில் பெற்ற ஊதியம் தொடர்பான விவரத்தை கொண்டிருக்கும். அதனுடன் சேர்த்து புதிய ஊதியத்துக்கு ஏற்ப வரிப்பிடித்தம் செய்யப்படும். 12பி படிவத்தை புதிய நிறுவனத்துக்கு கொடுக்கவில்லை என்றால் மூல வரிப்பிடித்தம் குறைவாக இருக்கும். ஆனால் வருமான வரிப்படிவம் தாக்கல் செய்கையில் கூடுதல் வரி செலுத்த வேண்டி இருக்கும். மேலும் அபராதமும் செலுத்த வேண்டி இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 88

  ஏப்ரல் 1 முதல் வரப்போகும் மாற்றங்கள்.. சிலிண்டர், பெட்ரோல் விலை லிஸ்டில் இடம்பெறுமா?

  நாமினி தேர்வு
  பரஸ்பர நிதி முதலீடுகளில் முதலீடு செய்துள்ள நபர்கள் மார்ச் 31க்குள் நாமினி (வாரிசு) நபர் குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். யாரையும் நாமினியாக பரிந்துரைக்க விரும்பவில்லை எனால் அதற்கான விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

  MORE
  GALLERIES