முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » வட்டி அதிகமா வேணுமா? எந்த சேமிப்பு சிறந்தது? தெளிவான விளக்கம் இதோ!

வட்டி அதிகமா வேணுமா? எந்த சேமிப்பு சிறந்தது? தெளிவான விளக்கம் இதோ!

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் மட்டுமல்லாது பெண்கள் தங்கள் பேரில் கூட  அதிகபட்ச  தொகையாக ரூ.2 லட்சம்  வரை டெபாசிட் செய்யலாம்.

 • 17

  வட்டி அதிகமா வேணுமா? எந்த சேமிப்பு சிறந்தது? தெளிவான விளக்கம் இதோ!

  மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் மட்டுமல்லாது பெண்கள் தங்கள் பேரில் கூட அதிகபட்ச தொகையாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம் 7.5 சதவீத நிலையான வட்டி விகிதத்தை வழங்கும்.

  MORE
  GALLERIES

 • 27

  வட்டி அதிகமா வேணுமா? எந்த சேமிப்பு சிறந்தது? தெளிவான விளக்கம் இதோ!

  இத்திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் பெரும்பாலான வங்கி வைப்புத் தொகை மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதி போன்ற பிற பிரபலமான முதலீட்டுத் திட்டங்களை விட அதிகமாகும். மேலும், தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) ஆகிவற்றின் வட்டி விகிதத்தை விட அதிகம்.

  MORE
  GALLERIES

 • 37

  வட்டி அதிகமா வேணுமா? எந்த சேமிப்பு சிறந்தது? தெளிவான விளக்கம் இதோ!

  நீண்ட கால சிறுசேமிப்பு போல இல்லாமல் மிகக்குறுகிய காலத்திற்குள் பெரும் தொகையை சேமிப்பதே இந்த திட்டத்தின் குறிக்கோள். எனவே இதற்கான முதிர்வு காலம் 2 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மார்ச் 31, 2025 வரை மட்டுமே மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 47

  வட்டி அதிகமா வேணுமா? எந்த சேமிப்பு சிறந்தது? தெளிவான விளக்கம் இதோ!

  சேமிப்பு கணக்கில் உள்ள தொகையை பின் காலத்திற்கு எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த சேமிப்பு தொகையில் பகுதியளவு தொகையை திரும்பப் பெறும் வசதி இத்திட்டத்தில் அனுமதிக்கபடுகிறது. இந்த திட்டத்தை அரசுக்கு சொந்தமான வங்கிகளிலும் அஞ்சல் அலுவலகங்களிலும் திறக்க முடியும்.

  MORE
  GALLERIES

 • 57

  வட்டி அதிகமா வேணுமா? எந்த சேமிப்பு சிறந்தது? தெளிவான விளக்கம் இதோ!

  நிலையான வைப்பு தொகை (Fixed Deposit -FD): நிலையான வைப்பு தொகை என்பது பண முதலீட்டு திட்டங்களில் ஒரு வகையாகும். இத்திட்டத்தின் கீழ், வங்கி அல்லது வங்கி சாராத நிதி நிறுவனங்களில் நிதியை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு வைப்பு வைக்க வேண்டும். முதிர்வு காலம் வரை அந்த நிதியை வங்கியில் இருந்து எடுக்க முடியாது. வங்கிகளில் நிலையான வைப்பு தொகைக்கான காலத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளாக நமது விருப்பதற்கு ஏற்ப தேர்வு செய்துகொள்ளலாம். ஒருவேளை, நிலையான வைப்புத்தொகையில் வைப்பு வைக்கப்பட்ட நிதியை முதிர்வு காலத்திற்கு முன்னரே வங்கியில் இருந்து திரும்ப பெற வேண்டுமென்றால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். முதிர்வு காலம் முடிந்த பின்னர், நாம் வைப்பு வைத்திருந்த நிதி வட்டியுடன் நமக்கு கிடைக்கும். இந்த வட்டியை நாம் முதிர்வு காலத்திற்கு முன்பே மாத மாதமும் பெற முடியும்.

  MORE
  GALLERIES

 • 67

  வட்டி அதிகமா வேணுமா? எந்த சேமிப்பு சிறந்தது? தெளிவான விளக்கம் இதோ!

  2 வருட FD களில் முதலீடு செய்யப்படும் பணமும் அந்த முதலீடுகளின் மூலம் கிடைக்கும் வருமானமும் வரியிலிருந்து விடுபடவில்லை. 2 கோடி ரூபாய்க்குள் முதிர்ச்சியடையும் இரண்டு வருட நிலையான விகித வைப்புகளுக்கு (FDs) பாரத ஸ்டேட் வங்கி பொது குடிமக்களுக்கு 6.80 சதவீத வட்டி விகிதத்தையும், மூத்த குடிமக்களுக்கு 7.30 சதவீத வட்டி விகிதத்தையும் வழங்குகிறது. இரண்டு வருட நிலையான விகித வைப்புகளுக்கு, HDFC வங்கி வழக்கமான நுகர்வோருக்கு 7 சதவீத வட்டியையும் மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதத்தையும் வழங்குகிறது.

  MORE
  GALLERIES

 • 77

  வட்டி அதிகமா வேணுமா? எந்த சேமிப்பு சிறந்தது? தெளிவான விளக்கம் இதோ!

  மேற்கண்ட இரண்டு திட்டங்களில் வட்டி என்று வரும்போது, ​ ஒரு முதலீட்டாளர் FDகளில் பெறும் வட்டியை விட மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் அதிக வட்டியை பெறுகிறார். எனவே மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்கள் பெண்களுக்கு இரண்டு வருட காலத்திற்கு பணத்தை முதலீடு செய்ய சிறந்த தேர்வாகும்.

  MORE
  GALLERIES