நாட்டில் இருக்கும் பெரும்பாலான வங்கிகளால் ஃபிக்ஸட் டெபாசிட் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. புதிதாக முதலீடு செய்ய விரும்பும் பெரும்பான்மையான மக்களின் முதல் தேர்வாக ஃபிக்ஸட் டெபாசிட் இருக்கிறது. நீங்களும் FD-ல் முதலீடு செய்யவே விரும்புகிறீர்களா? உங்களை போன்றே பெரும்பாலான இந்தியர்கள் ஏன் FD-ஐ தேர்வு செய்கிறார்கள் என்பதற்கான காரணத்தை இங்கே பார்க்கலாம்.
இன்வெஸ்ட்டிங் பிளாட்ஃபார்மான Kuvera இது தொடர்பான சர்வே-வை சமீபத்தில் நடத்தியது. இந்த சர்வேயில் பதிலளித்த பெரும்பாலான இந்தியர்கள் பங்கு சந்தை ஏற்றத்தில் இருந்தாலும், இறக்கத்திலிருந்தாலும் முதலீடு செய்யப்பட்ட நிதிக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதால் தங்களை போன்ற பெரும்பாலான முதலீட்டாளர்கள் FD-யில் பணத்தை முதலீடு செய்வதாக கூறி இருக்கிறார்கள்.
இந்த சர்வேயில் பங்கேற்று பதிலளித்தவர்களில் ஏறக்குறைய 44% க்கும் அதிகமானவர்கள் மூன்று ஆண்டுகளுக்குள் தங்களுக்கு பணம் தேவைப்படும் சூழல் இருக்கும் நிலையில், அதற்கான முழு பாதுகாப்பு இருப்பதால் FD-ல் முதலீடு செய்ததாக கூறி இருக்கிறார்கள். சர்வேயில் பங்கேற்ற 23% பேர் கூறுகையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்க மற்றும் அவசர தேவைக்கான நிதியை சேர்த்து வைக்க FD-ல் முதலீடு செய்ததாக கூறி இருக்கிறார்கள்.
ஆன்லைன் முதலீடு மற்றும் நிதி திட்டமிடல் பிளாட்ஃபார்மான Kuvera தனது இந்த சர்வே பற்றி கூறுகையில், இந்தியர்களிடையே FD-க்கள் பிரபலமாக உளளதற்கு பின்னால் இருக்கும் காரணங்களை புரிந்து கொள்ள அதன் முதலீட்டாளர்களில் சுமார் 1.6 மில்லியன் பேரை ஆய்வு செய்ததாக குறிப்பிட்டு இருக்கிறது. Kuvera-வின் இணை நிறுவனரான கவுரவ் ரஸ்தோகி கூறுகையில், உண்மையில் பிற முதலீட்டு திட்டங்களை விட இந்தியர்களிடையே FD-க்கள் மிக பிரபலமாக உள்ளன. இதற்கான காரணம் என்ன என்பதை நாங்கள் புரிந்து கொள்ள விரும்பினோம்.
FD திட்டங்களின் எளிமை மற்றும் அவை முதலீடு செய்யும் நிதிக்கு தரும் உறுதியான பாதுகாப்பு உள்ளிட்டவையே முதலீட்டாளர்களை FD திட்டங்களை நோக்கி ஈர்க்கின்றன என்பது எங்களது தேடலின் முடிவில் தெரிந்து கொண்டோம். FD என்பது மார்க்கெட் ஏற்ற இறக்கத்திலிருந்து அவசரகால நிதிகளை பாதுகாக்க உதவும் ஒரு சிறந்த விருப்பமாக இருக்கிறது, எங்கள் முதலீட்டாளர்களில் பெரும் பகுதியினர் இதனை ஒப்பு கொண்டுள்ளார்கள் என்றார்.
முதலீட்டாளர்களின் தேவையை புரிந்து கொள்ள SEBI கடந்த 2017-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில் சுமார் 95%-க்கும் அதிகமான குடும்பங்கள் தங்களுடைய நிதிகளை FD-யில் முதலீடு செய்ய விரும்புவதையும், சுமார் 10% பேர் மட்டுமே மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மற்றும் ஸ்டாக்ஸ் காலத்தில் முதலீடு செய்ய விரும்புவதும் கண்டறியப்பட்டது என முந்தைய ஆய்வையும் Kuvera சுட்டிக்காட்டி இருக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி கடந்த மார்ச் 2022-ல் மொத்த வங்கி வைப்புத்தொகை இதுவரை இல்லாத அளவுக்கு $2,242.775 பில்லியன்களை எட்டியுள்ளதையும் Kuvera குறிப்பிட்டுள்ளது. இந்த நிறுவனம் நடத்தி இருக்கும் சர்வேயின்படி அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் ஐந்தில் ஒருவர் அவசர நிதி காரணங்களுக்காக FD-யை கருத்தில் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
சுமார் 12% முதலீட்டாளர்கள் எளிமை மற்றும் பரிச்சயத்திற்காக FD-யில் முதலீடு செய்ய விரும்பினர். மேலும் 10-ல் ஒருவர் சந்தை ஏற்ற இறக்கத்திலிருந்து கிடைக்கும் பாதுகாப்பிற்காக FD-ல் முதலீடு செய்துள்ளார்கள். பணவீக்கத்தை முறியடிக்க RBI சமீபத்தில் ரெப்போ விகிதங்களை அதிகரித்துள்ள நிலையில், FD-களில் முதலீடு செய்ய இது நல்ல நேரம். FD பாதுகாப்பானவை மற்றும் நிலையான விதிமுறைகளின் கீழ் உத்தரவாதமான முதலீடுகளை வழங்குகின்றன. குறைந்த ஆபத்துள்ள முதலீட்டிற்கு செல்ல விரும்புவோருக்கு FD நல்ல தேர்வாக இருக்கும் என்கிறார் கவுரவ் ரஸ்தோகி.