முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » FD க்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ள வங்கிகளின் பட்டியல்..!

FD க்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ள வங்கிகளின் பட்டியல்..!

தாங்கள் சேமிக்கும் பணத்தை பாதுகாப்பான வழியில் முதலீடு செய்ய பலரும் விரும்புகிறார்கள். இது போன்ற எண்ணம் உள்ள பலரது மத்தியில் பிரபலமாக உள்ள ஒன்று FD எனப்படும் ஃபிக்ஸட் டெபாசிட் (Fixed Deposit).

  • 16

    FD க்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ள வங்கிகளின் பட்டியல்..!

    FD-யானது நிலையான வைப்புத்தொகை எனவும் குறிப்பிடப்படுகிறது. இதனிடையே ரிசர்வ் வங்கி கடந்த 2 மாதங்களாக ரெப்போ விகிதத்தை (Repo Rate) மாற்றாமல் வைத்துள்ளது. ரெப்போ விகிதத்தை தொடர்ந்து நிலைநிறுத்த ரிசர்வ் வங்கி முடிவெடுத்து அதனை மாற்றாமல் வைத்திருக்கும் நிலையில், பல வங்கிகளும் தங்களது ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியமைக்ககாமல் இருக்கின்றன.

    MORE
    GALLERIES

  • 26

    FD க்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ள வங்கிகளின் பட்டியல்..!

    இருப்பினும் சில வங்கிகள் மே 2023-ல் தங்களுடைய ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன அல்லது திருத்தியுள்ளன. அவை எந்த வங்கிகள் என்பதையும், அந்த வங்கிகளின் சமீபத்திய FD விகிதங்களையும் இங்கே தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்...

    MORE
    GALLERIES

  • 36

    FD க்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ள வங்கிகளின் பட்டியல்..!

    DCB பேங்க்கின் லேட்டஸ்ட் FD விகிதங்கள் : ரூ.2 கோடிக்கும் கீழ் உள்ள டெபாசிட்டுகளுக்கான நிலையான வைப்பு தொகைக்கான வட்டி விகிதங்களை DCB பேங்க் குறைத்துள்ளது. மே 8, 2023 முதல் புதிய விகிதங்கள் அமலுக்கு வரும் என்று DCB பேங்க்கின் வெப்சைட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தத்தின் படி, சீனியர் சிட்டிசன்களுக்கு 8.5 சதவீதமும், வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு 8 சதவீதமும் கூடிய FD திட்டங்களை DCB பேங்க் வழங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 46

    FD க்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ள வங்கிகளின் பட்டியல்..!

    சூர்யோதை ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்கின் லேட்டஸ்ட் FD விகிதங்கள் : 1 முதல் 5 வருட காலத்திற்கான நிலையான வைப்பு தொகையின் வட்டி விகிதங்கள் 49 முதல் 160 பிபிஎஸ் வரை சூர்யோதை ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்கில் திருத்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் மே 5, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த மாற்றத்தை தொடர்ந்து இப்போது ரூ.2 கோடிக்குளான டெபாசிட்களில் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்ச்சி காலத்துடன், பொது மக்களுக்கு 4% முதல் 9.1% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4.5% முதல் 9.6% வரையிலும் வட்டி விகிதங்களை இந்த வங்கி வழங்குகிறது.

    MORE
    GALLERIES

  • 56

    FD க்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ள வங்கிகளின் பட்டியல்..!

    யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க்கின் லேட்டஸ்ட் FD விகிதங்கள் : யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் நிலையான வைப்பு தொகைக்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. இந்த மாற்றங்கள் மே 2, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த வங்கியின் வெப்சைட்டில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இப்போது குறைந்தபட்சம் 1001 நாட்களுக்கு வைத்திருக்கும் நிலையான வைப்புகளுக்கு மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 9.5% வட்டி விகிதத்தை யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் வழங்குகிறது. அதே நேரம் இதே காலத்திற்கு வழக்கமான குடிமக்கள் வைத்திருக்கும் நிலையான வைப்பு தொகைக்கு வருடத்திற்கு 9% வட்டி விகிதமே வழங்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 66

    FD க்கான வட்டி விகிதங்களை திருத்தியுள்ள வங்கிகளின் பட்டியல்..!

    FD-யை முன்கூட்டியே திரும்ப பெற்றால் : ஃபிக்ஸட் டெபாசிட்ஸ் மற்றும் ரெக்கரிங் டெபாசிட்ஸ் ஒருவேளை மெச்சூரிட்டி பீரியட்டிற்கு முன் திரும்பப் பெறப்பட்டால், வைப்புத் தொகையை வைத்திருந்த காலத்திற்குப் பொருந்தக்கூடிய அல்லது ஒப்பந்த விகிதத்தில் (contracted rate) 1% வரை அபராதம் விதிக்கப்படும்.

    MORE
    GALLERIES