முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » வீடியோ.. உணவு ஆர்டர்.. செல்போன் பயன்பாட்டில் இந்தியர்கள்.. புட்டுபுட்டு வைத்த புள்ளிவிவரம்!

வீடியோ.. உணவு ஆர்டர்.. செல்போன் பயன்பாட்டில் இந்தியர்கள்.. புட்டுபுட்டு வைத்த புள்ளிவிவரம்!

பல நிறுவனங்களும் தங்களது சேவைகள் அனைத்தையுமே இணைய வழியாக தருவதில் முனைப்பு காட்டி அதில் வெற்றியும் பெற்றுள்ளன. இதன் காரணமாக நமக்கு தேவையான அனைத்தையுமே வெறும் ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வசதி இருந்தாலே பெற முடியும் என்ற சூழல் தற்போது உருவாக்கியுள்ளது.

 • 16

  வீடியோ.. உணவு ஆர்டர்.. செல்போன் பயன்பாட்டில் இந்தியர்கள்.. புட்டுபுட்டு வைத்த புள்ளிவிவரம்!

  இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமான அளவில் அதிகரித்து விட்டது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பெரும்பாலான இந்தியர்கள் இணையத்தின் மூலம் பெறப்படும் சேவைகளை பயன்படுத்துவதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.மேலும் பல நிறுவனங்களும் தங்களது சேவைகள் அனைத்தையுமே இணைய வழியாக தருவதில் முனைப்பு காட்டி அதில் வெற்றியும் பெற்றுள்ளன. இதன் காரணமாக நமக்கு தேவையான அனைத்தையுமே வெறும் ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வசதி இருந்தாலே பெற முடியும் என்ற சூழல் தற்போது உருவாக்கியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 26

  வீடியோ.. உணவு ஆர்டர்.. செல்போன் பயன்பாட்டில் இந்தியர்கள்.. புட்டுபுட்டு வைத்த புள்ளிவிவரம்!

  அந்த வகையில்சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் இந்தியர்கள் 50% அதிக நேரத்தை ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில் செலவிட்டதாக தெரியவந்துள்ளது. அதில் பெண்களின் பங்களிப்பும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் பேமென்ட் ஆப்ஸ்களை பொறுத்தவரையில் வெறும் 11.3% இந்திய பெண்கள் மட்டுமே அவற்றை பயன்படுத்துகின்றனர். இதைவிட வேறு சில இதர ஆப்ஸ்களை பயன்படுத்துவதிலேயே அவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரியவந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 36

  வீடியோ.. உணவு ஆர்டர்.. செல்போன் பயன்பாட்டில் இந்தியர்கள்.. புட்டுபுட்டு வைத்த புள்ளிவிவரம்!

  கேமிங் ஆப்ஸ்களை பொருத்தவரையில் 6.1 சதவீத பெண்கள் அவற்றில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்திய பெண்களின் பெரும்பாலான கவனமானது உணவு ஆர்டர் செய்யும் செயலிகளிலேயே இருந்து வருவதாக தெரிகிறது. கிட்டத்தட்ட 23.5% இந்திய பெண்கள் உணவு ஆர்டர் செய்யும் செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதைத் தவிர தகவல் தொடர்பு செயலிகளை 23.3% பெண்களும், வீடியோ ஆப்ஸ்களை 21.7 சதவீத பெண்களும் பயன்படுத்துகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 46

  வீடியோ.. உணவு ஆர்டர்.. செல்போன் பயன்பாட்டில் இந்தியர்கள்.. புட்டுபுட்டு வைத்த புள்ளிவிவரம்!

  2022 ஆம் ஆண்டிலிருந்து 2023 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 85 மில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் யூசர்களை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. குறிப்பாக ஜனவரி 2022 ஆம் ஆண்டிலிருந்து ஜனவரி 2023 ஆம் ஆண்டு வரை ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவரின் எண்ணிக்கையானது கணிசமாக அதிகரித்துள்ளது. மேலும் சராசரியாக ஒரு நபர் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் எண்ணிக்கை ஆனது 2022 ஆம் ஆண்டு 30 சதவீதமாக இருந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் இது 46 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  MORE
  GALLERIES

 • 56

  வீடியோ.. உணவு ஆர்டர்.. செல்போன் பயன்பாட்டில் இந்தியர்கள்.. புட்டுபுட்டு வைத்த புள்ளிவிவரம்!

  இதைத் தவிர சராசரியாக ஒரு ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர் தனது மொபைலிலின் கீபோர்டில் அரை மணி நேரம் செலவழிப்பதாக தெரியவந்துள்ளது. 2022 ஐ விட 2023 ஆம் ஆண்டின் மொபைல் யூஸர்கள் 50% அதிகமாக நேரத்தை தனது ஸ்மார்ட் போனுடன் செலவிடுவதாக தெரிகிறது. கிடைத்த அறிக்கையின் படி பெரும்பாலான இந்தியர்கள் தகவல் தொடர்பு செயல்களிலும் சமூக வலைத்தள செயல்களிலும் வீடியோ செயல்களிலும் அதிகபட்ச நேரங்களை செலவிடுகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 66

  வீடியோ.. உணவு ஆர்டர்.. செல்போன் பயன்பாட்டில் இந்தியர்கள்.. புட்டுபுட்டு வைத்த புள்ளிவிவரம்!

  ஒட்டுமொத்தமாக 76.68 சதவீத நேரத்தை இவர்கள் செலவிடுகின்றனர். இதை தவிர மற்ற இதர செயலிகளில் 23% அல்லது அதைவிட சிறிது அதிகம் நேரத்தை மட்டுமே அவர்கள் செலவிடுவதாக தெரியவந்துள்ளது. இவற்றைத் தவிர லைப் ஸ்டைல் செயலிகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 9 சதவீதத்திற்கும் அதிக நேரத்தை வாடிக்கையாளர்கள் இதில் செலவழிக்கின்றனர்.

  MORE
  GALLERIES