முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » அசத்தல் ரீசார்ஜ் ப்ளான் இதுதான்.. ஜியோ vs ஏர்டெல் vs வோடபோன் லிஸ்ட்!

அசத்தல் ரீசார்ஜ் ப்ளான் இதுதான்.. ஜியோ vs ஏர்டெல் vs வோடபோன் லிஸ்ட்!

cheapest Recharge plans : இந்தியாவில் உள்ள இந்த 3 முன்னணி டெலிகாம் ஆப்ரேட்டர்கள் வருடாந்திர முதல் மாதாந்திர பிளான் அல்லது பட்ஜெட் முதல் விலை உயர்ந்த கூடுதல் நன்மைகளுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்களை கொண்டுள்ளன.

  • 16

    அசத்தல் ரீசார்ஜ் ப்ளான் இதுதான்.. ஜியோ vs ஏர்டெல் vs வோடபோன் லிஸ்ட்!

    ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ உள்ளிட்ட நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் யூஸர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பரந்த அளவிலான பல ப்ரீபெய்ட் பிளான்களை வழங்குகின்றன.இந்தியாவில் உள்ள இந்த 3 முன்னணி டெலிகாம் ஆப்ரேட்டர்கள் வருடாந்திர முதல் மாதாந்திர பிளான் அல்லது பட்ஜெட் முதல் விலை உயர்ந்த கூடுதல் நன்மைகளுடன் கூடிய ரீசார்ஜ் பிளான்களை கொண்டுள்ளன. பட்ஜெட் அல்லது மலிவான பிளான் என்று வரும் போது ரூ.100-க்கு மேல் சில பிளான்களை நிறுவனங்கள் வழங்குகின்றன.

    MORE
    GALLERIES

  • 26

    அசத்தல் ரீசார்ஜ் ப்ளான் இதுதான்.. ஜியோ vs ஏர்டெல் vs வோடபோன் லிஸ்ட்!

    ரூ.99-க்கு ஒரு ப்ரீபெய்ட் பிளான் ஒன்றை வழங்கி வரும் ஏர்டெல் விரைவில் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஏர்டெல் மட்டுமின்றி ஜியோ, விஐ நிறுவனங்களும் தற்போதுள்ள பிளான்களின் கட்டணத்தை 10% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே டெலிகாம் ஆப்ரேட்டர்கள் கட்டணங்களை உயர்த்தும் முன் ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ வழங்கும் மலிவான ப்ரீபெய்ட் பிளான்களை இங்கே ஒப்பிட்டுப் பார்ப்போம்.

    MORE
    GALLERIES

  • 36

    அசத்தல் ரீசார்ஜ் ப்ளான் இதுதான்.. ஜியோ vs ஏர்டெல் vs வோடபோன் லிஸ்ட்!

    ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ வழங்கும் மலிவான திட்டங்களின் பட்டியல்:
    ஜியோ ரூ.119 பிளான் : ஜியோ தனது இந்த மலிவான ப்ரீபெய்ட் பிளானுடன் அன்லிமிட்டட் கால்ஸ், 300 SMS மற்றும் 1.5GB தினசரி டேட்டாவை வழங்குகிறது. இந்த பேக்கின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இந்த பிளானோடு JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud உள்ளிட்ட ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தாவும் அடங்கும்.

    MORE
    GALLERIES

  • 46

    அசத்தல் ரீசார்ஜ் ப்ளான் இதுதான்.. ஜியோ vs ஏர்டெல் vs வோடபோன் லிஸ்ட்!

    ஏர்டெல் ரூ.155 பிளான் : இந்த பிளானில் ஏர்டெல் 1GB டொட்டல் டேட்டா, 300 SMS மற்றும்vo லோக்கல் & எஸ்டிடி-க்கான அன்லிமிட்டட் கால்ஸ் உள்ளிட்டவற்றை வழங்குகிறது. ஏர்டெல் இந்த மலிவான ப்ரீபெய்ட் பிளானை 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்த பிளான் வழங்கும் கூடுதல் நன்மைகளில் ஹலோ ட்யூன்ஸ் மற்றும் Wynk-ற்கான இலவச சந்தாவும் அடங்கும்.

    MORE
    GALLERIES

  • 56

    அசத்தல் ரீசார்ஜ் ப்ளான் இதுதான்.. ஜியோ vs ஏர்டெல் vs வோடபோன் லிஸ்ட்!

    விஐ ரூ.129 பிளான் : இந்த பிளானில் வோடோபோன் ஐடியா அன்லிமிட்டட் கால்ஸ், 200MB டோட்டல் இன்டர்நெட் டேட்டா மற்றும் 18 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. நாட்டில் இருக்கும் அனைத்து டெலிகாம் ஆப்ரேட்டர்களும் அன்லிமிட்டட் கால்ஸ்களை வழங்கும் போது, இன்டர்நெட், எஸ்எம்எஸ் அல்லது வேலிடிட்டியில் சமரசம் செய்து செலவுகளைக் குறைத்து குறைந்தபட்ச விலையில் பிளான்களை வழங்குகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 66

    அசத்தல் ரீசார்ஜ் ப்ளான் இதுதான்.. ஜியோ vs ஏர்டெல் vs வோடபோன் லிஸ்ட்!

    எந்த டெலிகாம் நிறுவனம் மலிவான ப்ரீபெய்டு திட்டத்தில் சிறந்த வேல்யூவை வழங்குகிறது? : ரிலையன்ஸ் ஜியோ ரூ.119 பிளானை 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.8.5 செலவாகும். மறுபுறம் ஏர்டெல் தனது 24 நாட்கள் வேலிடிட்டி பிளானை ரூ.155-க்கு வழங்குகிறது. இந்த பிளானின்படி ஒரு நாளைக்கு ரூ.6.4 செலவாகிறது. அதே போல Vi-யின் 18 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.129 திட்டத்தை ஒருநாளைக்கு ஆகும் செலவாக கணக்கிட்டால் ஒரு நாளைக்கு ரூ.7.1 ஆகும். ஒரு நாளுக்கு ஆகும் செலவுகளை பார்க்கும்போது ஏர்டெல் மலிவான ப்ரீபெய்ட் திட்டமாக இருக்கிறது. இருப்பினும் ஜியோ அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் தினசரி டேட்டா பலன்களை வழங்குவதால் யூஸர்கள் அதிக வேல்யூவை பெறுகிறார்கள். Vi-ஐ பொறுத்தவரை, இந்த பிளான் கால்ஸிற்காக மட்டுமே உள்ளது.

    MORE
    GALLERIES