இந்த இரண்டு நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு கொண்டு வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற பலன்களை வழங்கி வருகின்றன. ஜியோ நிறுவனம் பல ஆப்ஷன்களை வழங்கும் அதே நேரம், ஏர்டெல் நிறுவனம் அதிக டீல்ஸ்களை சேர்த்து வழங்குகிறது. விலையை பொறுத்த வரை இரு நிறுவனங்களும் பல பிளான்களுக்கு கிட்டத்தட்ட ஒரே பிரைசிங் பாயின்ட்டை மெயின்டைன் செய்து வருகின்றன. ஆனால் அவை வழங்கும் நன்மைகளில் வித்தியாசங்கள் இருக்கின்றன. எனினும் இரு நிறுவனங்களும் ரூ.2,999 என்ற ஒரே விலையில் ஒரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை வழங்கி வருகின்றன.
ஜியோ மற்றும் ஏர்டெல் வழங்கும் ரூ.2,999 மதிப்பிலான இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் வருடாந்திர திட்டமாகும். இந்த பிளான் கால்ஸ், டேட்டா மற்றும் கூடுதல் நன்மைகளை 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. எனினும் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களுமே இந்த வருடாந்திர பிளானை தனித்துவமாக்க பல கூடுதல் சலுகைகளை கூடவே வழங்குகின்றன. இந்த நிறுவனங்கள் வழங்கும் ரூ.2999 ப்ரீபெய்ட் பிளானை பற்றி மற்றும் எந்த நிறுவனம் சிறந்த மதிப்பை வழங்குகிறது என்பதை பற்றியும் சற்று விரிவாக பார்க்கலாம்.
ஜியோ-வின் ரூ.2999 பிளான் : ரூ,2,999-க்கு ரீசார்ஜ் செய்யும் ஜியோ யூஸர்கள் தினசரி 2.5GB லிமிட்டுடன் 365 நாட்களுக்கு மொத்தம் 912.5GB இன்டர்நெட் டேட்டாவை பெறுவார்கள். மேலும் 365 நாட்களுக்கு அன்லிமிட்டட் கால்ஸ், நாளொன்றுக்கு 100 SMS இந்த பிளானில் அடக்கம்.இந்த வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் ஜியோ தற்போது ஒரு சிறப்பு சலுகையை வழங்குகிறது. ஜியோ ஹேப்பி நியூ இயர் என்ற இந்த ஸ்பெஷல் சலுகையின் கீழ் யூஸர்களுக்கு 23 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி + 75GB டேட்டா கிடைக்கிறது. அதாவது யூஸர்கள் 365 நாட்கள் வேலிடிட்டிக்கு பதில் 388 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 912.5GB டேட்டாவிற்கு பதில் 987.5GB டேட்டா கிடைக்கும். ஜியோ யூஸர்கள் JioTV, JioCinema, JioSecurity மற்றும் Jio Cloud உள்ளிட்ட ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச அணுகலை பெறுவார்கள்.
ஏர்டெல்-லின் ரூ.2999 பிளான் : 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஏர்டெல் வழங்கும் இந்த ப்ரீபெய்ட் பிளானில் தினசரி 2GB டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் நாளொன்றுக்கு 100 SMS உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கின்றன. இந்த வருடாந்திர பிளானுடன் கொடுக்கப்படும் கூடுதல் பலன்களில் யூஸர்கள் Apollo 24|7 Circle நன்மைகள், FASTag-ல் ரூ.100 கேஷ்பேக், ஃப்ரீ ஹலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக்கிற்கான இலவச சந்தா உள்ளிட்டவை அடக்கம்.
2 நிறுவனங்களும் வழங்கும் கூடுதல் நன்மைகளைப் பார்க்கும்போது இரண்டும் சந்தாக்களில் நியாயமான பங்கை வழங்குகின்றன. இருப்பினும் ஏர்டெல்-லோடு ஒப்பிடும் போது ஜியோ ஸ்பெஷல் பிளானுடன் அதிக தினசரி டேட்டா லிமிட் மற்றும் அதிக வேலிடிட்டி வழங்குவதால் ஏர்டெல்லை விட ஒரு படி மேலே இருப்பதாக கொள்ளலாம். ஒருவேளை ஏர்டெல் யூஸர்கள் தினசரி 2.5GB டேட்டாவை பெற விரும்பினால், ரூ.3359 ப்ரீபெய்ட் பிளானை ரீசார்ஜ் செய்ய வேண்டும். மறுபுறம் ஜியோ வழங்கும் ரூ.2879 ப்ரீபெய்ட் பிளான் தினசரி 2GB டேட்டா லிமிட்டை வழங்குகிறது.