ஹோம் » போடோகல்லெரி » வணிகம் » 2023-ஆம் ஆண்டில் கவனமாக இருக்க வேண்டிய சில முதலீட்டு விஷயங்களின் பட்டியல்!

2023-ஆம் ஆண்டில் கவனமாக இருக்க வேண்டிய சில முதலீட்டு விஷயங்களின் பட்டியல்!

ஒரு சில முதலீட்டாளர்கள் மட்டுமே கிரிப்டோ பற்றி சரியாக புரிந்து கொண்டனர். இதில் ஈடுபட்ட பலரும் சோஷியல் மீடியாக்களில் ஹாட் டாபிக்காக இருந்ததன் காரணமாக கிரிப்டோவில் முதலீடு செய்தனர்.

 • 16

  2023-ஆம் ஆண்டில் கவனமாக இருக்க வேண்டிய சில முதலீட்டு விஷயங்களின் பட்டியல்!

  கடந்த 2020 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் தங்கம், ஈக்விட்டிஸ், பாண்ட்ஸ், ரியல் எஸ்டேட், கமாடிட்டிஸ் மற்றும் கிரிப்டோகரன்சி உள்ளிட்டவை முதலீட்டாளர்களுக்கு உறுதியான வருவாயை வழங்கின. அதே நேரம் 2022-ஆம் ஆண்டில் ஏற்பட்ட இழப்புகள் முதலீடு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டிய சில படிப்பினைகளை வழங்கின. தற்போது 2023-ஆம் ஆண்டு துவங்கி இருக்கும் நிலையில் முதலீட்டு ஸ்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியவைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 26

  2023-ஆம் ஆண்டில் கவனமாக இருக்க வேண்டிய சில முதலீட்டு விஷயங்களின் பட்டியல்!

  நிதி சுதந்திரம் : 30 வயதிற்கு முன் நிதி சுதந்திரம் அடைய அல்லது 35 வயதில் ஓய்வு பெற பாதை எதுவும் இல்லை. எனவே முதலீட்டாளர்கள் தங்கள் வருவாயின் பெரும்பகுதியை கிரிப்டோஸ், NFTs, டெரிவேடிவ்ஸ் மற்றும் பி2பி பிளாட்ஃபார்ம்ஸ் போன்ற அதிக ஆபத்துள்ள திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். ஆனால் அதற்கு பதில் 100% உழைப்பை பணியிடத்தில் வெளிப்படுத்தி அதிக வருமானத்திற்காக பாடுபடலாம். மாதாந்திர வருமானத்தில் 40-50% நிதியை முக்கிய போர்ட்ஃபோலியோவில் சேமிக்கவும். அசட் அலோகேஷன் மாடல்ஸ் அடங்கிய போர்ட்ஃபோலியோவில் முதலீடு செய்வது முதலீட்டாளர்களை பாதகமான இடர்பாடுகளில் இருந்து பாதுகாக்கும் அதே நேரம் நீண்ட காலத்திற்கு வருவாய் திறனை அதிகரிக்கின்றன. 40-களின் நடுப்பகுதியில் ஒருவர் நிதி சுதந்திரத்தை இலக்காக கொள்ள இந்த படியை பின்பற்றலாம்.

  MORE
  GALLERIES

 • 36

  2023-ஆம் ஆண்டில் கவனமாக இருக்க வேண்டிய சில முதலீட்டு விஷயங்களின் பட்டியல்!

  துரத்தும் முதலீட்டு மோகம் : ஒரு சில முதலீட்டாளர்கள் மட்டுமே கிரிப்டோ பற்றி சரியாக புரிந்து கொண்டனர். இதில் ஈடுபட்ட பலரும் சோஷியல் மீடியாக்களில் ஹாட் டாபிக்காக இருந்ததன் காரணமாக கிரிப்டோவில் முதலீடு செய்தனர். ஆனால் கடந்த சில மாதங்களில் கிரிப்டோகரன்சிகள் அவற்றின் சந்தை மதிப்பில் 60-90% இழந்துள்ளன. நாட்டில் உள்ள புதிய தொழில்நுட்ப நிறுவனங்களின் IPO இதற்கு இன்னும் ஒரு பொருத்தமான உதாரணம். இது லிஸ்ட்டிங் செய்யப்பட்ட ட சில மாதங்களுக்கு பிறகு சுமார் 60-80% வரை மார்க்கெட் வேல்யூ-வை இழந்தது. 1990-களில் டாட்-காம் பூமாக இருந்தாலும் அல்லது 2021-ல் கிரிப்டோவாக இருந்தாலும் ஒவ்வொரு மோகமும் முதலீட்டாளர்களின் செல்வத்தை விரைவாக காலி செய்யக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தியது.

  MORE
  GALLERIES

 • 46

  2023-ஆம் ஆண்டில் கவனமாக இருக்க வேண்டிய சில முதலீட்டு விஷயங்களின் பட்டியல்!

  நிதியை கட்டியெழுப்ப ஸ்டாக்-பிக்கிங் : மல்டி-பேக்கர்களை அடையாளம் காண்பதன் மூலம் அசாதாரண செல்வத்தை உருவாக்கும் கோட்பாட்டிற்கு பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்ரீ சிமென்ட், கோட்டக் மஹிந்திரா உள்ளிட்ட வங்கியின் வெற்றி கதைகள் முக்கிய நம்பகத்தன்மையை வழங்கியுள்ளன. ஆனால் இந்த கதைகள் யெஸ் பேங்க், யூனிடெக் மற்றும் ரிலையன்ஸ் பவர் ஆகியவற்றில் முதலீட்டாளர்களால் ஏற்பட்ட செல்வ அழிவை மறைக்கின்றன. 2010-ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள மிகப்பெரிய 500 நிறுவனங்களில், கிட்டத்தட்ட 300 நிறுவனங்கள் பணவீக்கத்தால் பாதிப்பட்டன. சுமார் 240 நிறுவனங்கள் டிசம்பர் 2010 - டிசம்பர் 2020 வரை முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை உருவாக்கின. அந்த வகையில் பஜாஜ் ஃபைனான்ஸை விட யெஸ் பேங்கை தேர்ந்தெடுக்க அதிக நிகழ்தகவு (10-ற்கு 6) உள்ளது. எனவே ஸ்டாக்-பிக்கிங்கிற்கு விரிவான தொழில்முறை பயிற்சி மற்றும் வணிகங்களை மதிப்பிட போதுமான நேரம் அவசியம். இது பொதுவாக ரீடெயில் முதலீட்டாளர்களிடம் கிடைக்காது.

  MORE
  GALLERIES

 • 56

  2023-ஆம் ஆண்டில் கவனமாக இருக்க வேண்டிய சில முதலீட்டு விஷயங்களின் பட்டியல்!

  அர்த்தமுள்ள முதலீடு.! இந்திய நிறுவனங்களின் சந்தை மூலதனம் தற்போது $3 டிரில்லியனாக இருந்தாலும் வரும் 2035-க்குள் $25 டிரில்லியனாக விரிவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. 10%- 15% என்ற குறைந்த அளவில் ஷேர் மார்க்கெட்டில் நுழைவது 10 ஆண்டுகளுக்கு பிறகு கூடுதல் ஆதாயங்களை அளிக்க கூடும். எனினும் இத்தகைய நீண்ட கால உறுதியான வாய்ப்புகளுடன் ஷேர் மார்க்கெட் நேரத்தை கணிப்பதற்கு பதில், பிராட் மார்க்கெட் ETFs நிதிகளில் வழக்கமான SIP-க்களை வைத்திருப்பது அல்லது விதிவிலக்கு இல்லா மியூச்சுவல் ஃபண்ட்ஸ்களில் முதலீடு செய்வது அர்த்தமுள்ளதாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 66

  2023-ஆம் ஆண்டில் கவனமாக இருக்க வேண்டிய சில முதலீட்டு விஷயங்களின் பட்டியல்!

  லைஃப்ஸ்டைலுக்கு..! 2010-ல் ஒருவர் குடும்ப விடுமுறைக்கு செல்வதற்கு பதில் ஜெட் ஏர்வேஸில் முதலீடு செய்திருந்தால் 90% நிதியை இழந்திருப்பார். எனவே முதலீடு முக்கியம் என்றாலும் ஒரு துறவி போல வாழ வேண்டும் என்பதில்லை. உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் வாழ்க்கைத் தரம், மனநலம் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய போதுமான வளங்களை கொண்டிருப்பதே செல்வத்தை அதிகரிப்பதற்கான முழு புள்ளி. எனவே உங்கள் வருமானத்தில் 10-20% லைஃப்ஸ்டைலை மேம்படுத்த பயன்படுத்தலாம்.

  MORE
  GALLERIES