மனநலப் பிரச்னை அல்லது ஹெச்ஐவி பாதிப்பு கொண்டவர்கள் போன்றவர்களும் இனி மருத்துவக் காப்பீட்டு திட்டங்களில் சேர்ந்து கொள்ள வழிவகை செய்யப்பட உள்ளது. காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) சார்பில், இதற்கான வழிமுறைகளை உருவாக்குமாறு அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக ஏற்கனவே இருக்கின்ற விதிமுறைகளின்படி மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் அமலில் இருக்கிறது. ஆனால், தொடர்புடைய நபர்களுக்கான பாதிப்பு எந்த அளவுக்கானது என்பதை மையப்படுத்தி அவர்களை பல நிறுவனங்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க மறுத்தன.
இந்த நிலையில், இருக்கின்ற வரைமுறைகள் மற்றும் குறைந்தபட்ச தகுதி போன்றவற்றை விரிவாக்கம் செய்வது குறித்து ஆராயுமாறு மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏஐ அறிவுறுத்தியுள்ளது. இதன்படி காப்பீட்டு நிறுவனங்கள் இந்த பிரத்யேக காப்பீட்டு திட்டத்தை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் விரிவாக்கம் செய்து கொள்ளலாம். ஆனால், விரிவாக்கம் செய்வதை முற்றிலுமாக புறக்கணிக்க இயலாது.
மனநல மருத்துவ பாதுகாப்புச் சட்டம் : மனநல மருத்துவ பாதுகாப்பு சட்டம் - கடந்த 2018ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தது. அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கான காப்பீட்டு திட்டத்தை உருவாக்க நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏஐ அறிவுறுத்த வேண்டும் என்று அந்த சட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. எனினும், இந்தத் திட்டத்தின் கீழ் தனிநபர்கள் பலன் அடைவதில் பல சிக்கல்களையும், சவால்களையும் எதிர்கொண்டு வருகின்றனர். பாதிப்புகள் அதிகம் இருப்பின் அவர்களுக்கு காப்பீடு திட்டம் மறுக்கப்பட்டது வருகிறது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள் : புதிதாக உருவாக்கப்பட உள்ள காப்பீடு திட்டத்தில் அடிப்படை காப்புறுதித் தொகை என்பது ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. 18 முதல் 65 வயது வரையிலான தனி நபர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம். அதேபோல பச்சிளம் குழந்தைகள் முதல் 17 வயது வரையிலான சிறுவர்களுக்கும் பிரத்யேக காப்பீடு வழங்கப்படும்.