முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » இதுவரை இல்லாத அளவு குறைந்த தங்கம் இறக்குமதி... வெளிவந்த முக்கிய காரணம்..!

இதுவரை இல்லாத அளவு குறைந்த தங்கம் இறக்குமதி... வெளிவந்த முக்கிய காரணம்..!

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்ததால், இறக்குமதி வரி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் நகை உற்பத்தியாளர்கள் மற்றும் நகைக்கடைக்காரர்கள் தங்கம் கொள்முதலில் தாமதம் செய்தனர் என்று அரசு தெரிவித்துள்ளது.

  • 16

    இதுவரை இல்லாத அளவு குறைந்த தங்கம் இறக்குமதி... வெளிவந்த முக்கிய காரணம்..!

    தங்கம் விலையைப் பொறுத்தவரை எப்போது ஏறும் எப்போது இறங்கும் என்று சமீப காலமாக துல்லியமாக கணிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஒரு சில நாட்கள் தொடர்ந்து விலைச் சரிவை எதிர்கொண்ட தங்கம், திடீரென்று ஏற்றம் கண்டது. உலக அளவில் பணவீக்கம், தங்கத்துக்கான டிமாண்ட், இறக்குமதி வரி, உள்ளிட்ட பல காரணங்கள் தங்கத்தின் விலையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் ஜனவரி மாதம் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு குறைந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று இங்கே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 26

    இதுவரை இல்லாத அளவு குறைந்த தங்கம் இறக்குமதி... வெளிவந்த முக்கிய காரணம்..!

    பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த பட்டியலில் தங்கம் இடம்பெற்று இருந்தது. ஆனால், தங்கத்திற்கான இறக்குமதி வரி குறைக்கப்படவில்லை. மாறாக வெள்ளிக்கான இறக்குமதி வரி மட்டும் தான் குறைக்கப்பட்டிருந்தது. இறக்குமதி வரி குறைக்கப்படவில்லை என்ற சூழ்நிலையில் கூட பிப்ரவரி மாதம் முழுவதுமே தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து, இடையில் ஓரிரு நாட்கள் மட்டும் அதிகரித்தது.

    MORE
    GALLERIES

  • 36

    இதுவரை இல்லாத அளவு குறைந்த தங்கம் இறக்குமதி... வெளிவந்த முக்கிய காரணம்..!

    கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது ஜனவரி மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் 76 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 32 மாதங்களாக ஒப்பிடும்போது இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் இறக்குமதி குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்ததால், இறக்குமதி வரி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் நகை உற்பத்தியாளர்கள் மற்றும் நகைக்கடைக்காரர்கள் தங்கம் கொள்முதலில் தாமதம் செய்தனர் என்று அரசாங்கத்தில் வெளியான தகவல் குறிக்கின்றது.

    MORE
    GALLERIES

  • 46

    இதுவரை இல்லாத அளவு குறைந்த தங்கம் இறக்குமதி... வெளிவந்த முக்கிய காரணம்..!

    தங்கம் கொள்முதலில் உலகில் இரண்டாவது மிகப் பெரிய நாடாக இந்தியா இருக்கிறது. இந்த நிலையில் தங்கத்தின் இறக்குமதி சரிந்துள்ளதால், இவை விலையில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்தியாவின் வணிகத்தில் இருக்கும் குறைப்பாடுகள் மற்றும் சரிந்து வரும் இந்திய மதிப்பின் ரூபாயை சரி செய்வதற்கு இது உதவும். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 45 டன்கள் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 11 டன்கள் தங்கம் தான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பை பொறுத்தவரை, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 2.38 பில்லியன் டாலர் மதிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்ட தங்கம், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 697 மில்லியன் டாலராக சரிந்துள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    இதுவரை இல்லாத அளவு குறைந்த தங்கம் இறக்குமதி... வெளிவந்த முக்கிய காரணம்..!

    இந்தியாவில் தங்கம் வாங்குவதில் பல்வேறு காரணங்கள் உள்ளன. திருமணங்களுக்காக மொத்தமாக வாங்கும் பழக்கம் இருக்கிறது, மாதா மாதம் அல்லது இயன்ற போதெல்லாம் தங்கம் சேமிக்கும் பழக்கமும் இருக்கிறது. எனவே தங்கத்தை பொறுத்தவரை நகையாக வாங்குவது தான் இந்தியாவில் மிக மிக அதிகம். பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி வரி எப்படியும் குறைக்கப்படும் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்த நகை வியாபாரிகளும் புல்லியன் டீலர்களும் ஜனவரி மாதம் இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட தங்கத்தை கொள்முதல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 66

    இதுவரை இல்லாத அளவு குறைந்த தங்கம் இறக்குமதி... வெளிவந்த முக்கிய காரணம்..!

    நடப்பு மாதத்தில் தங்கம் இறக்குமதி எந்த அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்பதை பற்றிய தகவல் அடுத்த மாதம் தெரிய வரும். இந்நிலையில் திருமண காலம் தொடங்கியிருப்பதால் நடப்பு மாதம் மட்டுமல்லாமல் அடுத்த சில மாதங்களுக்கு தங்கத்தின் இறக்குமதி அதிகரிக்கும்.

    MORE
    GALLERIES