இந்த ரயில் தொடங்கினால், கோவா செல்லும் முதல் வந்தே பாரத் ரயிலாக இது இருக்கும். மும்பை-கோவா வந்தே பாரத் ரயில் சோதனை வியாழக்கிழமை நடைபெற்றது. சோதனை ஓட்டம் முடிந்ததும் மும்பை-கோவா வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் வரும் ஜூன் மாதத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் இருந்து காந்திநகர், சாய்நகர் ஷீரடி மற்றும் சோலாப்பூர் வழித்தடத்திற்கு ஏற்கனவே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.