தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில், சைபர் குற்றங்களும் அதைவிட பலமடங்கு முன்னேறி நடந்து வருகிறது. அந்த வகையில் மக்களின் பணத்தை கொள்ளையடிக்க ஒரு புதிய வழியை மோசடியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது உங்கள் கைரேகைகளை கொண்டு ஏமாற்றும் யுக்தியை அவர்கள் பயன்படுத்துகின்றனர். நீங்கள் ஏடிஎம்மில் பணம் எடுத்தால், நீங்கள் இந்த மோசடி செய்பவர்களின் இலக்காக இருக்கலாம்.
எனவே, சைபர் விழிப்புணர்வு தினத்தில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா இதுபோன்ற மோசடிகள் குறித்த விழிப்புணர்வு தகவல்களை தருகின்றது. இதுபோன்ற மோசடிகளுக்கு எதிராக நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று வங்கி கூறியுள்ளது. ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது இந்த சில குறிப்புகளைப் பின்பற்றினால் மோசடிகளில் இருந்து தப்பிக்கலாம்.