அரசாங்கத்திற்கு செலுத்தும் கட்டணங்கள் மட்டுமே நேரில் சென்று செலுத்தப்பட்டு வந்த நிலையும் இப்போது மாறிவிட்டது. அப்படி மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும் மின்சாரத்திற்கான மின் கட்டணத்தை வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் செலுத்துவதற்கான வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அனைவரது செல்போனில் இருக்கும் போன்பே மூலமும் மின்சார கட்டணத்தை செலுத்தலாம்
உள்ளே Consumer Number கேட்கப்படும். இது, வட சென்னை, விழுப்புரம், கோவை, ஈரோடு, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, வேலூர், சென்னை தெற்கு ஆகிய மண்டலங்களின் கீழ் இயங்கும். உங்கள் மின் இணைப்பு எந்த மண்டலத்தின் கீழ் வரும் என்பதை தெரிந்துகொண்டு Consumer Numberஐ தெளிவாக பதிவிட வேண்டும்.
மின் இணைப்பு எண்ணை பதிவிட்டதும் பெயர் சரியாக இருக்கிறதா என்று செக் செய்துவிட்டு மின் கட்டணத்தை செலுத்தலாம்
ஒருமுறை மட்டுமே இந்த மின் இணைப்பு எண்ணை பதிவு செய்தால் போதும். அதன்பின்னர் தொடர்ந்து ஒரே க்ளிக்கில் பணம் செலுத்த முடியும்