நிதி அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, ஏப்ரல் 1, 2023 முதல் ஆறு மாத காலத்திற்குள் ஆதாரை PF கணக்குகளுடன் இணைக்க வேண்டும். ஆறு மாத காலம் செப்டம்பர் 30, 2023 அன்று முடிவடைகிறது. முதலீட்டாளர்கள் ஆதாருடன் பான் எண்ணையும் சமர்ப்பிக்கலாம். ஒருவேளை இதை செய்யாவிட்டால், அந்தக் கணக்கு முடக்கப்படும் அபாயம் இருக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், முதலீட்டாளர் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம்.
செலுத்த வேண்டிய வட்டித் தொகை PPF கணக்கு வைத்திருப்பவரின் கணக்கில் வரவு வைக்கப்படாது. முதலீட்டாளர் தனது பிபிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யவும் முடியாது. முதிர்வுத் தொகை முதலீட்டாளரால் குறிப்பிடப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படாது. இப்படி பல சிக்கல்களை சந்திக்க நேரும். இப்போது, எப்படி ஆன்லைன் மூலம் உங்கள் PF கணக்கை ஆதாருடன் இணைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) இணையப் பக்கத்தின் வழியாக உங்கள் ஆதார் எண்ணை PF உடன் இணைக்க முடியும். இதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் ஒருங்கிணைந்த unifiedportal.epfindia.gov.in பக்கத்திற்குச் செல்ல வேண்டும். UAN Member e-Sewa இன் கீழ் இருக்கும் For Employees இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் UAN ஐடி மற்றும் பாஸ்வோர்டை உள்ளிட்டு லாகின் செய்யவும். 'Manage' என்ற பகுதியின் கீழ், 'KYC' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் EPF கணக்குடன் இணைக்க பல ஆவணங்களைப் பதிவேற்ற கூறும் பக்கத்திற்கு இது உங்களை அழைத்துச் செல்லும்.
அதில் ஆதார் என்று குறிப்பிடும் விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். அங்கு கூறப்படும் வழிகாட்டுதல்களை நிறைவேற்றுவதன் மூலம் ஆதார் எண்ணை PF கணக்குடன் இணைத்துக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் இணைக்க முடியாதவர்கள், அருகில் இருக்கும் EPFO அலுவலக கிளைக்குச் சென்று இதற்கான படிவத்தை (Aadhaar Seeding Application Form)' வாங்கி நிரப்பவும். படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் ஆதார் எண் மற்றும் UAN விவரங்களை கவனமாக நிரப்பவும்.
உங்கள் PAN, UAN மற்றும் ஆதார் அட்டையின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களுடன் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும். சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் ஆதார் அட்டை உங்கள் PF கணக்குடன் இணைக்கப்படும். இதையடுத்து, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் அதற்கான அறிவிப்பு கிடைக்கப் பெறும். உங்கள் பெயர் மற்றும் ஆதார் அட்டை எண்ணை சரியாக நிரப்பி, 'Save' என்பதைக் கிளிக் செய்யவும். UIDAI இன் தரவுத்தளத்தில் உங்கள் ஆதார் எண் சரிபார்க்கப்படும். UIDAI மூலம் KYC ஆவணம் வெற்றிகரமாக அங்கீகரிக்கப்பட்ட பிறகு, EPF கணக்கு ஆதார் அட்டையுடன் இணைக்கப்படும். உங்கள் கார்டு எண்ணுக்கு அடுத்ததாக 'Verified' என எழுதப்படும். இந்த முறையில் உங்கள் PPF கணக்குடன் ஆதார் விபரங்களை ஆன்லைனில் இணைக்கலாம்.