முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » பெட்ரோல், டீசல் போடும்போது இதை கவனிச்சு இருக்கீங்களா? தரத்தை கண்டுபிடிக்க இதுதான் வழி!

பெட்ரோல், டீசல் போடும்போது இதை கவனிச்சு இருக்கீங்களா? தரத்தை கண்டுபிடிக்க இதுதான் வழி!

நம்முடைய வாகனங்களில் போடும் பெட்ரோல் மற்றும் டீசலில் தரத்தை எப்படி தெரிந்துகொள்ளுவது என்பதைப் பற்றி இங்குத் தெரிந்துகொள்ளலாம்.

  • 16

    பெட்ரோல், டீசல் போடும்போது இதை கவனிச்சு இருக்கீங்களா? தரத்தை கண்டுபிடிக்க இதுதான் வழி!

    வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் போடும் போது அதனின் தரத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தது உண்டா? மீட்டர் 0-வின் இருந்து தொடங்குகிறதா என்று மட்டும் பார்த்தால் போதாது அதனின் தரத்தையும் அறிந்துகொள்வது அவசியமாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    பெட்ரோல், டீசல் போடும்போது இதை கவனிச்சு இருக்கீங்களா? தரத்தை கண்டுபிடிக்க இதுதான் வழி!

    வாகனங்கள் இயங்க எரிப்பொருளாக திகழும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்பது மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும். தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் தினமும் ரூ.100க்கு மேல் பணம் செலுத்தி பெட்ரோல் பெறவேண்டிய நிலை உள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    பெட்ரோல், டீசல் போடும்போது இதை கவனிச்சு இருக்கீங்களா? தரத்தை கண்டுபிடிக்க இதுதான் வழி!

    இந்த நிலையில், நீங்கள் பணம் கொடுத்துப் போடும் பெட்ரோல் தரமாக உள்ளதா என்பதைக் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதனைத் தெரிந்துகொள்ளுவது மிக எளிமையான விஷயமே.

    MORE
    GALLERIES

  • 46

    பெட்ரோல், டீசல் போடும்போது இதை கவனிச்சு இருக்கீங்களா? தரத்தை கண்டுபிடிக்க இதுதான் வழி!

    பெட்ரோல் பங்கில் Display-வில் பெட்ரோலில் Density அளவு இடம்பெற்று இருக்கும். அதனை வைத்து நீங்கள் பெட்ரோலின் தரத்தைக் கண்டறியலாம். அரசு, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு என்று தர மதிப்பீட்டை நிர்ணயித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். பெட்ரோல் / டீசல் போடும் இயந்திரத்தின் Display மற்றும் பில் ஆகியவற்றில் நீங்கள் போட்டுக்கொண்ட எரிபொருளின் Density அளவு இடம்பெற்று இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 56

    பெட்ரோல், டீசல் போடும்போது இதை கவனிச்சு இருக்கீங்களா? தரத்தை கண்டுபிடிக்க இதுதான் வழி!

    இதுவும் இல்லையென்றால், Pump Meter-இல் கண்டிப்பாக பெட்ரோல் / டீசலின் தரத்தின் அளவு இடம்பெற்றிருக்கும். மத்திய அரசு விதியில் படி, பெட்ரோல் Density அளவு 730 to 800 kg per cubic meter இருக்க வேண்டும். அதே போல், டீசலுக்கு 830 to 900 kg per cubic meter இருக்க வேண்டும். அதிக வெப்பநிலை காரணத்தினால் சில நேரங்களில் அளவில் மாற்றம் ஏற்படலாம்.

    MORE
    GALLERIES

  • 66

    பெட்ரோல், டீசல் போடும்போது இதை கவனிச்சு இருக்கீங்களா? தரத்தை கண்டுபிடிக்க இதுதான் வழி!

    இதற்குக் குறைவான அடர்த்தி அளவில் உங்களுக்கு பெட்ரோல்/டீசல் விநியோகம் செய்யப்பட்டால் உங்களால் அந்த நிறுவனத்தின் மேல் புகார் அளிக்க முடியும். நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 இன் படி, ஒவ்வொரு நுகர்வோருக்கும் பெட்ரோலின் தூய்மையை அளவிட உரிமை உண்டு.

    MORE
    GALLERIES