கத்திரி வெயிலியில் குளிர் காற்றை தேடி மனம் அலைகிறது. ஏசி இல்லாதவர்களுக்கு இந்த வெயில் காலத்தை சமாளிப்பது பெரிய சவால் தான். ஒரு கட்டத்துக்கு மேல் ஃபேன் காற்றும் அனல் அடிக்க ஆரம்பித்து விடுகிறது. இதனை சரிசெய்ய மாடியில் தென்னை ஓலைகளை கொண்டு பசுமை குடில் அமைக்கலாம்.. ஆனால், அதிக வெயிலுக்கு தென்னை ஓலைகள் தீ பிடிக்கும் என்பதால், அதில் அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும்.