பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்பதை மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முன்னதாக, இந்த நடவடிக்கையை பூர்த்தி செய்வதற்காக மத்திய அரசு வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், சில நிபந்தனைகளுடன் காலக்கெடு இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் - பான் இணைப்பு - செக் செய்வது எப்படி?
https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணையதளப்பக்கத்துக்குச் செல்ல வேண்டும்
link aadhaar status என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்
உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து அங்குள்ள எழுத்தை (Captcha) அப்படியே பதிவு செய்ய வேண்டும்
பின்னர் பான் கார்டு இணைப்பு தொடர்பான தகவலை பெறலாம்