Indane Gas வாடிக்கையாளர்கள் 7588888824 என்ற எண் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். முதலில் இந்த எண்ணை தாங்கள் பதிவு செய்துள்ள போனில் சேமித்து கொள்ளவும். பின்னர் வாட்ஸ்அப்பில் ‘Book’ அல்லது ‘Refill’ என டைப் செய்து மெசேஜ் அனுப்பவும். இந்த மெசேஜிற்கு ‘தங்களின் ஆர்டர் பெறப்பட்டது’ என்ற பதிலைப் பெறுவீர்கள். அத்துடன் சிலிண்டர் டெலிவரி செய்யும் தேதியும் உங்களுக்கு மெசேஜ் மூலம் வரும்.
அதுமட்டுமின்றி Paytm, PhonePay, Google pay மூலமாகவும் சிலிண்டரையும் முன்பதிவு செய்யலாம். இதிலும் கூட பதிவு செய்யப்பட்டுள்ளது கைபேசி எண்ணை மட்டும் உள்ளிடவும். கிரெடிட் கார்டு மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்ய விரும்புவோர் சலுகைகளை சரிபார்த்து அந்த தளத்தின் மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.