முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » ரூ.7 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்கு மேல்... யார் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும்? இதோ முழு விவரம்

ரூ.7 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்கு மேல்... யார் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும்? இதோ முழு விவரம்

Income Tax : நீங்கள் ரூ. 7 லட்சத்திலிருந்து மேல் வருமானம் பெற்றால், நீங்கள் ரூ.3 லட்சம் முதல் ரூ. 6 லட்சம் வரை 5 சதவிகிதம் வருமான வரி செலுத்தவேண்டும். ஆண்டு வருமானம் ரூ.9 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் என இருந்தால் 15 சதவிகிதம் வருமான வரி செலுத்த வேண்டும்.

 • 16

  ரூ.7 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்கு மேல்... யார் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும்? இதோ முழு விவரம்

  இந்திய மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த மத்திய பட்ஜெட்டை நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். வழக்கம் போல பல சாதகங்கள் மற்றும் பாதகங்கள் உள்ளது. இருந்தப் போதும் வருமான வரி விதிப்பில் கொண்டுவந்துள்ள சில மாற்றங்கள் மாத சம்பளம் வாங்குவோருக்கு பெரும் மகிழ்ச்சியான செய்தியாகவே உள்ளது. அதாவது தனி நபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ஆண்டிற்கு 2.5 லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்கள் வருமான வரியிலிருந்து விலக்கு அளிப்பதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 26

  ரூ.7 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்கு மேல்... யார் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும்? இதோ முழு விவரம்

  புதிய வருமான வரி முறையில் ரூ. 7 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுபவர்கள் எந்த வித வருமானமும் செலுத்த தேவையில்லை எனவும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிச்சயம் இந்த அறிவிப்பு வந்தவுடன் மாத சம்பளம் வாங்கும் அனைவரும் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்ற சந்தேகம் நிச்சயம் ஏற்பட்டிருக்கும். இதோ ரூ.7 ரூ.10 ரூ.15 லட்சம் என சம்பளம் வாங்குபவர்கள் புதிய அறிவிப்பின் படி எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

  MORE
  GALLERIES

 • 36

  ரூ.7 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்கு மேல்... யார் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும்? இதோ முழு விவரம்

  புதிய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொடர்பான வெளியான அறிவிப்பின் படி, ஆண்டு வருமானம் ரூ. 7 லட்சம் இருந்தால் வரி செலுத்த வேண்யடிதில்லை. அதே சமயம் ரூ. 7 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் ஈட்டுவோர் ரூ. 3 லட்சத்திலிருந்து வருமான வரி செலுத்த வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 46

  ரூ.7 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்கு மேல்... யார் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும்? இதோ முழு விவரம்

  எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? : இதே போல் ரூ. 12 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் என இருந்தால் 20 சதவிகிதமும், ரூ. 15 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் இருந்தால் 30 சதவிகிதம் வரை நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும்.உதாரணமாக நீங்கள் 9 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் வருமானம் பெற்றீர்கள் என்றால் 3 லிருந்து 6 லட்சம் வரை 5 சதவிகிதம் என்ற அடிப்படையில் 15 ஆயிரமும், 6 லட்சத்திலிந்து 9 சதவிகிதம் வரை 10 சதவிகிதம் என்ற அடிப்படையில் 30 ஆயிரம் என மொத்தம் 45 ஆயிரம் ரூபாய் வரி செலுத்த வேண்டிருக்கும் என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதே போல், ஆண்டுக்கு ரூ.15 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கினால் மொத்தமாக ரூ.1.05 லட்சம் ரூபாய் வரை மட்டும் நீங்கள் வருமான வரி செலுத்தவேண்டியிருக்கும்.

  MORE
  GALLERIES

 • 56

  ரூ.7 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்கு மேல்... யார் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும்? இதோ முழு விவரம்

  இதுக்குறித்து கருத்து தெரிவித்த Bankbazaar.com இன் இணை நிறுவனர் மற்றும் FICCI Fintech கமிட்டியின் இணைத் தலைவர் தெரிவிக்கையில், மேம்படுத்தப்பட்ட வரி வரம்புகள் காரணமாக, ரூ.15 லட்சத்துக்கு மேல் வருமானம் பெறுபவர்களுக்கு வரிகள் ஓரளவு குறையும் எனவும் அதேசமயம் பழைய முறையில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 66

  ரூ.7 லட்சம் முதல் ரூ.15 லட்சத்திற்கு மேல்... யார் எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும்? இதோ முழு விவரம்

  மேலும் புதிய வரி விதிப்பில் அதிகபட்ச கூடுதல் கட்டணத்தை 37 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்க அரசு முன்மொழிந்துள்ளது. இதன் அடிப்படையில் ரூ. 5 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் அனைவருக்கும் குறைந்த வரி செலுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES