இன்றைக்கு உள்ள பெரும்பாலான நபர்கள் கடன்களில் தான் வாழ்க்கையை நடத்துகின்றனர். வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, பிஸினஸ் தொடங்குவது என அனைத்திற்கும் வங்கிகளின் மூலம் கடன்களைப் பெற வேண்டிய சூழலில் மக்களின் பொருளாதாரம் உள்ளது. எந்த வங்கியில் வட்டி குறைவாக உள்ளது? என ஆராய்ந்தப் பின்னர் தான் கடன்களை வாங்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த சூழலில் தான், நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சென்ற மாதம், இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளாக உயர்த்தியுள்ளது.
இதனால் வீட்டுக்கடன், வாகன கடன் போன்றவற்றிற்கு வட்டி விகிதங்கள் உயர்வதோடு மாதந்தோறும் கடன்களுக்கு கட்டப்படும் EMI கள் உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள முக்கியமான வங்கிகளில் சில வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. எந்தெந்த வங்கிகள்? எவ்வளவு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது என்பது குறித்து இங்கே முழுமையாக தெரிந்து கொள்வோம். வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ள வங்கிகளின் பட்டியல்:
பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India): இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் இந்தியா வீட்டுக் கடன்களுக்கான வெளிப்புற பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை (EBLR) யை கடந்த ஆகஸ்ட் 15, 2022 முதல் உயர்த்தியுள்ளது. இதன் வட்டி விகிதங்கள் 7.55 % + CRP + BSP லிருந்து 8.05%+ CRP+ BSP ஆக உயர்த்தப்பட்டுள்ளன. வங்கிகளின் ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதம் 7.15 % + CRP லிருந்து 7.65% + CRP ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank): ஐசிஐசிஐ வங்கி கடந்த மாதத்தில் எம்சிஎல்ஆர் விகிதம் 7.65 சதவீதத்தில் இருந்து 7.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு 7.80 சதவீதமாகவும், ஆறு மாதங்களுக்கு புதிய கட்டணங்கள் 7.95 சதவீதமாகவும் மாற்றியமைக்கப் பட்டுள்ளது.மேலும் ரெப்போ வட்டி விகிதம் 5.40% ஆகும்.