முகப்பு » புகைப்பட செய்தி » வீட்டை மறுசீரமைப்பு செய்யனுமா..? இந்த வழிகளில் லோன் பெறுவது எளிது..

வீட்டை மறுசீரமைப்பு செய்யனுமா..? இந்த வழிகளில் லோன் பெறுவது எளிது..

நீங்கள் ஏற்கனவே வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கி இருந்தாலும் கூட டாப் அப் முறையில் வீட்டை மறுசீரமைப்பு செய்வதற்கு மீண்டும் இந்த மறுசீரமைப்பு கடனை நீங்கள் வாங்குவதற்கு வங்கியில் விண்ணப்பிக்க முடியும்.

  • 16

    வீட்டை மறுசீரமைப்பு செய்யனுமா..? இந்த வழிகளில் லோன் பெறுவது எளிது..

    தற்போது பெரும்பாலான வங்கிகளில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப விதம் விதமான கடன்கள் வழங்கப்படுகின்றன. வீட்டுக் கடன், கல்வி கடன், வாகன கடன் போன்றவற்றின் வரிசையில் நம்மால் நமது வீட்டை மறுசீரமைப்பு செய்வதற்காகவும் வங்கியில் கடன் பெற முடியும். வீட்டிற்கு புதிய தளம் அமைத்தல், பெயிண்டிங் வேலைகள், டைல்ஸ் வேலைகள், வசதிகளை மேம்படுத்துதல், வடிவமைப்பை மாற்றுதல், வீட்டில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து விரிவுபடுத்துதல் போன்ற பல்வேறு விதமான மறுசீரமைப்புகளுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன.

    MORE
    GALLERIES

  • 26

    வீட்டை மறுசீரமைப்பு செய்யனுமா..? இந்த வழிகளில் லோன் பெறுவது எளிது..

    என்பிஎஸ்சி மற்றும் எச்எப்சி போன்ற பலவிதமான வங்கிகளும் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த கடன்களை வழங்குகின்றன. குறிப்பாக மற்ற கடன்களைப் போல இந்த வீட்டை மறுசீரமைப்பு செய்வதற்கு அதிக அளவிலான கட்டுப்பாடுகள் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படுவதில்லை. மேலும் நீங்கள் ஏற்கனவே வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வாங்கி இருந்தாலும் கூட டாப் அப் முறையில் வீட்டை மறுசீரமைப்பு செய்வதற்கு மீண்டும் இந்த மறுசீரமைப்பு கடனை நீங்கள் வாங்குவதற்கு வங்கியில் விண்ணப்பிக்க முடியும்.

    MORE
    GALLERIES

  • 36

    வீட்டை மறுசீரமைப்பு செய்யனுமா..? இந்த வழிகளில் லோன் பெறுவது எளிது..

    பொதுவாக பெரும்பாலான வங்கிகளில் வழங்கப்படும் இந்த மறுசீரமைப்பு கடன்களுக்கு 10.50 சதவீதம் வட்டி விதிக்கப்படுகிறது. சில பிஎஸ்சி வங்கிகளில் தனிநபர் கடன்கள் குறைவான வட்டியில் வழங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட ஐந்து வருட கால அவகாசத்தில் சில வங்கிகள் நீண்டகால கடன்களையும் தனி நபர்களுக்கு அளிக்கின்றன. பொதுவாகவே வீட்டை மறுசீரமைப்பு செய்வதற்கு தனி நபர் கடன் வாங்குவதில் நமக்கு ஒரு ஆதாயம் உள்ளது. அதாவது மற்ற கடன்களைப் போல் அல்லாமல் தனி நபர் கடன்களுக்கு மிக விரைவாகவே வங்கிகளில் அனுமதி அளிக்கப்பட்டு விடும்.

    MORE
    GALLERIES

  • 46

    வீட்டை மறுசீரமைப்பு செய்யனுமா..? இந்த வழிகளில் லோன் பெறுவது எளிது..

    மேலும் பணமும் மிக விரைவாக உங்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விடும். இது போன்ற தனி நபர் கடன்களுக்கு விண்ணப்பித்த தேதியில் இருந்து இரண்டு முதல் ஏழு ஏழு நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விடும். மேலும் இந்த செயல்முறையை மிகவும் எளிதாக மாற்றுவதற்கும் வேகமாக மாற்றுவதற்கும் வங்கிகள் தற்போது முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் தங்களது செயல்பாடுகளை மாற்றி அமைத்துள்ளன.

    MORE
    GALLERIES

  • 56

    வீட்டை மறுசீரமைப்பு செய்யனுமா..? இந்த வழிகளில் லோன் பெறுவது எளிது..

    இதைத் தவிர பல்வேறு கடன் வழங்கும் நிறுவனங்களும் வங்கிகளும் வாடிக்கையாளர்களின் கடன் வாங்கிய வரலாற்றை பார்த்து அதன் அடிப்படையில் அவர்களுக்கு பிரி அங்கீகரிக்கப்பட்ட கடன்களை வழங்கப்படுகின்றன. இவைமுன்னர் கூறியதை விட மிக விரைவாகவே வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விடும். இதைத் தவிர உங்களுக்கு கடனை திரும்ப செலுத்துவதற்கும் பல்வேறு வித வசதிகள் அளிக்கப்படுகின்றன. நீங்கள் மாதத் தவணை மூலமாகவும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியிலும் கூட உங்களது கடனை செலுத்துமாறு வசதி அளிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    வீட்டை மறுசீரமைப்பு செய்யனுமா..? இந்த வழிகளில் லோன் பெறுவது எளிது..

    இன்றைய நிலையில் பெரும்பாலான வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கணக்கை துவங்குவது முதல் பண பரிமாற்றம் செய்வது வரை அனைத்தும் டிஜிட்டல் முறையிலேயே செய்யப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக செயல்முறைகள் அனைத்தும் மிக விரைவாக முடிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு நாளைக்குள்ளாகவே உங்களது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. பணம் உங்களுக்கு கிடைத்தவுடன் நீங்கள் அதனை உங்கள் விருப்பப்படி செலவு செய்து கொள்ளலாம் அதற்கான எந்த வித ஆதாரத்தையும் நீங்கள் வங்கியில் காண்பிக்க தேவையில்லை. மாதமாதம் உங்களது தவணையை சரியாக செலுத்தினாலே போதுமானது.

    MORE
    GALLERIES