அமெரிக்கா சென்று பணியாற்ற வேண்டும் என்ற கனவு தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கக் கூடிய பலருக்கு இருக்கும். அந்நாட்டில் பணியாற்றுவதற்கு ஹெச்1பி விசா கட்டாயம் என்பது எல்லோருக்கும் தெரியும். இதற்காக காத்திருப்பவர்களுக்கு தற்போது அமெரிக்க அரசின் குடியுரிமை மற்றும் உள்நுழைவு சேவை பிரிவின் சார்பில் புதிய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹெச்1பி விசா என்றால் என்ன : அமெரிக்க நிறுவனங்களில் வெளிநாட்டுப் பணியாளர்களை தொழில்நுட்ப பிரிவு மற்றும் இதர பிரிவு பணிகளுக்காக தேர்வு செய்யும்போது, அவர்களுக்காக வழங்கப்படுகின் குடிநுழைவு அல்லாத வகைதான் ஹெச்1பி விசா ஆகும். இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் நிலையில், அவர்களுக்கு இந்த விசா கட்டாயமாகும்.
2024 நிதியாண்டுக்கான பதிவுகளை செய்யும்போது அதற்கான ஒப்புதல் எண் உங்களுக்கு வழங்கப்படும். அந்த எண்-ஐ வைத்து உங்களுக்கான பதிவு எந்த சூழலில் இருக்கிறது என்பதை நீங்கள் கண்டறிய முடியும். இதுகுறித்து அமெரிக்க குடியுரிமை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “விசாவுக்கான பதிவு நிலையை கண்டறிவதற்காக மட்டும் ஒப்புதல் எண்-ஐ நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், ஆன்லைன் ஸ்டேடஸ் தெரிந்து கொள்ள இந்த எண்-ஐ நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.