கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனைச் சரியான நேரத்தில் திருப்பி செலுத்துதல், முழு தொகையையும் செலுத்துவது, நிதி ரீதியான ஒழுக்கம் போன்ற பல்வேறு நடைமுறைகளை முறையாக நீங்கள் பின்பற்றினாலே இதன் சிபில் ஸ்கோர் அதிகரிக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் கடன் வழங்குபவர்களுக்கும் உங்கள் மீது நம்பிக்கை ஏற்படக்கூடும்.
கிரெடிட் கார்டு (credit card) பலதரப்பட்ட மக்களால் பயன்படுத்தப்படுகிறது. மொபைல் போன்கள் முதல் வீட்டிற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் கிரெடிட் கார்டுல தான் வாங்கினேன் என்ற வார்த்தைகளை பலர் கூறுவதைக் கேட்டிருப்போம். ஜவுளிக்கடை, நகைக்கடை, மொபைல் வாங்குவதற்கு என எங்கு சென்றாலும் கிரெடிட் கார்டு வைத்துள்ளவர்கள் நிச்சயம் பயன்படுத்துவார்கள். உங்கள் வங்கியின் சேமிப்புக் கணக்கில், பணப் பரிவர்த்தனை சரிவர இருந்தால், வங்கிகள் உங்களுக்கு கிரெடிட் கார்டு ஆஃபரை வழங்கும்.இதன் மூலம் தேவையானப் பொருள்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல், கடனும் பெறலாம். அதே சமயம் நீங்கள் கிரெடிட் கார்டு ஸ்கோரை சரியான விகிதத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இல்லை என்றால், அடுத்த முறை நீங்கள் உங்களது கார்டை எதற்காகவும் பயன்படுத்த முடியாது.
சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச்செலுத்துதல்: உங்களது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் கடன் பெறும் போது, முதலில் உங்களது இஎம்ஐ களை ஒரு போதும் தாமதமாகவோ அல்லது செலுத்தாமலோ இருக்கக்கூடாது. இவ்வாறு நீங்கள் தொடர்ச்சியாக அவ்வாறு செய்தால் உங்களது சிபில் ஸ்கோர் குறைகிறது. மேலும் நிதி ரீதியாக நீங்கள் பொறுப்பற்ற கடன் வாங்குபவர்களாக மதிப்பிடப்படுவீர்கள். எனவே கிரெடிட் கார்டு இஎம்ஐ மற்றும் நிலுவைத்தொகைகளைச் சரியான நேரத்தில் செலுத்தி உங்களது கிரெடிட் கார்டு சிபில் ஸ்கோரை அதிகப்படுத்துங்கள்.
பொறுப்புடன் செலவு செய்ய வேண்டும்: தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி பொருள்களை வாங்குவதற்காகப் பல்வேறு ஆஃபர்கள் வெளியாகும். இந்நேரத்தில் நீங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். உங்களுக்கு தேவையில்லாதப் பொருள்களை வாங்குவதைத் தவிர்த்து செலவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
முழுத்தொகையையும் செலுத்த வேண்டும்: கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நீங்கள் வாங்கும் எந்தவொரு கடனுக்கும் வட்டித் தொகையை முறையாக செலுத்த வேண்டும். மாதம் மாதம் வரக்கூடிய குறைந்த பட்ச தொகையை மட்டும் செலுத்துவது உங்களது கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்காது. ஒவ்வொரு பில்லிங் சுழற்சியின் முழுத்தொகையும் நீங்கள் கட்டுவதை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாக நீங்கள் கிரெடிட் வாங்கும் போது உங்களுக்கு எவ்வளவு வட்டி விகிதம்? எவ்வளவு தொகை? ப்ரீ கார்டா அல்லது ஆண்டிற்கு பணம் செலுத்தும் வகையில் உள்ள கிரெடிட் கார்டு? என்பது குறித்து முதலில் அறிந்துக் கொள்வது அவசியம்
இதோடு உங்களது கிரெடிட் கார்டு கடன்களுக்கு மாதந்திர EMI களை முறையாக செலுத்த வேண்டும். ஒரே நேரத்தில் பல கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பல செயலில் கணக்குகள் இருக்கும்போது திருப்பிச் செலுத்துதல்களைக் கண்காணிப்பது கடினம். மேலும், நிலுவையில் உள்ள கடன் வரிகள், கடன் வழங்குபவர்களுக்கு உங்களை அபாயகரமானதாகக் காட்ட நேரிடும். எனவே கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உங்களுக்கு நிதி ஒழுக்கம் முக்கியமானது. இவ்வாறு நீங்கள் செய்யும் போது கடன் வழங்குபவர்கள் மீண்டும் உங்களது வழங்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.