நாம் அனைவரிடத்திலும் ஓட்டுநர் உரிமம், ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட பல ஆவணங்கள் இருக்கும். இவை எல்லாம் மிக முக்கியமான ஆவணங்கள் ஆகும். ஆனால் பலருக்கு இந்த ஆவணங்களில் குழப்பம் இருக்கும். ஓட்டுநர் உரிமத்தில் ஒரு முகவரி என்றால், ரேசன் கார்டில் வேறு முகவரி இருக்கும். இப்படியான குழப்பத்துக்கு விரைவில் மத்திய அரசு முடிவுகட்டவுள்ளது
அதாவது உங்களது விவரங்களை ஆதார் அட்டையில் அப்டேட் செய்தால்.. ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையிலும் அவை புதுப்பிக்கப்படும். இதற்காக நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை. எல்லா ஆவணங்களும் ஒரே மாதிரியான விவரங்களைக் கொண்டிருக்கும்.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் போக்குவரத்து, ஊரக மேம்பாடு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இந்த புதிய அமைப்பை உருவாக்குவது குறித்து ஆலோசனை செய்து வருகிறது