முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » மொத்தமாக மாறும் ஏர் இந்தியா?! மாற்றத்தால் ஏற்றம் வருமா? சிஇஓ அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி.!

மொத்தமாக மாறும் ஏர் இந்தியா?! மாற்றத்தால் ஏற்றம் வருமா? சிஇஓ அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி.!

புதிய பணியாளர் நியமனம், ஏற்கனவே இருக்கும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு, புதிய பணி வரையறைக் கொள்கை என வரிசையாக சலுகைகைளை அறிவிக்க உள்ளதாக ஏர் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன் அறிவித்துள்ளார்.

 • 16

  மொத்தமாக மாறும் ஏர் இந்தியா?! மாற்றத்தால் ஏற்றம் வருமா? சிஇஓ அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி.!

  ஒரு காலத்தில் இந்தியாவின் ஒரு விமான சேவை நிறுவனமாக இருந்தது ஏர் இந்தியா. டாடா குழுமத்திற்கு சொந்தமாக இருந்த ஏர் இந்தியாவை இந்திய அரசு அரசுடைமையாக்கியது. அரசுடைமையான பிறகு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டிற்கான சேவைகளை வழங்கி வந்தது ஏர் இந்தியா. ஆனால் கடுமையான நிதி நெருக்கடியிலும் கடனிலும் தள்ளாடிய ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்பனை செய்ய முன்வந்தது மத்திய அரசு.

  MORE
  GALLERIES

 • 26

  மொத்தமாக மாறும் ஏர் இந்தியா?! மாற்றத்தால் ஏற்றம் வருமா? சிஇஓ அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி.!

  அதன்படி கடந்த ஆண்ட ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் விலைக்கு வாங்கியது. இழந்ததை மீண்டும் பெற்ற மகிழ்வில் இருக்கிறது. ஏர் இந்தியாவை சொந்தமாக்கிய பிறகு அவ்வப்போது சில சர்ச்சைகளில் சிக்கனாலும் ஏர் இந்தியாவை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் திறம்பட செய்து வருகிறார் அதன் தலைமை செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன்.

  MORE
  GALLERIES

 • 36

  மொத்தமாக மாறும் ஏர் இந்தியா?! மாற்றத்தால் ஏற்றம் வருமா? சிஇஓ அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி.!

  ஏர் இந்தியாவை விரிவாக்கும் முயற்சியாக புதிதாக 470 விமானங்களை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு புதிய மாற்றங்களை கொண்டு வர உள்ளதாக வில்சன் அறிவித்துள்ளார். அதன்படி ஏர் இந்தியா நிறுவனம் தனது லோகோ, கலர் ஸ்கீம், கேபின் உட்கட்டமைப்புகள், பணியாளர்களுக்கு வழங்கப்படும் சீருடை ஆகியவற்றை மொத்தமாக மாற்றி புதிய லுக் கொடுக்கப்படவிருக்கிறது.

  MORE
  GALLERIES

 • 46

  மொத்தமாக மாறும் ஏர் இந்தியா?! மாற்றத்தால் ஏற்றம் வருமா? சிஇஓ அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி.!

  இதன் மூலம் ஏர் இந்தியா நிறுவனம் அடையாளமே தெரியாமல் மாறப்போகிறது. இது மட்டுமல்ல இந்நிறுவனத்தின் ஊழியர்கள் விவகாரத்திலும் மிகப்பெரிய மாற்றங்கள் வரப்போகிறதாம். புதிய பணியாளர்களை எடுப்பது மட்டுமல்லாமல் ஏற்கனவே வேலை செய்யும் பணியாளர்களுக்கான மாற்றங்களையும் அறிவித்துள்ளது ஏர் இந்தியா. கேபின் க்ரூ, பைலட்டுகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, தகுதியுள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வு என சலுகைகளை வாரி வழங்க உள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.

  MORE
  GALLERIES

 • 56

  மொத்தமாக மாறும் ஏர் இந்தியா?! மாற்றத்தால் ஏற்றம் வருமா? சிஇஓ அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி.!

  அதே போல் ரூஸ்டர் எனப்படும் பணி ஒதுக்கீட்டு முறையிலும் மாற்றத்தை கொண்டுவர உள்ளது ஏர் இந்தியா. ஒளிவு மறைவற்ற பணி ஒதுக்கீடு மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் சமமான அளவு பணியும், சமநிலையான பணிகளும், வழங்கப்படும். கோல்டன் ஆஃப் எனப்படும் விடுமுறைகள், மற்றும் ஒரு விமான பணத்திற்கும் மற்றொரு விமான பயணத்திற்கும் போதுமான இடைவெளி ஆகியவை மாற்றியமைக்கப்பட்டு சீராக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 66

  மொத்தமாக மாறும் ஏர் இந்தியா?! மாற்றத்தால் ஏற்றம் வருமா? சிஇஓ அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி.!

  மேலும் தற்போது டாடா குழுமத்தின் நிர்வாகத்தின் கீழ் ஏர் இந்தியா, விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதுவரை இந்த மூன்று உப நிறுவனங்களின் ஊழியர்களுக்கான விவகாரங்கள் தனித்தனியாக பராமரிக்கப்பட்டு வந்தன. அனைத்து ஊழியர்களையும் ஒன்றணைக்க முடிவு செய்துள்ளது டாடா நிறுவனம். இதன் மூலம் வயது மற்றும் பணி மூப்பு அடிப்படையில் தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும் என நம்புகிறது டாடா குழும நிர்வாகம். இனி வேற லெவல் தான் இப்போதிருந்து ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கியிருக்கிறார்கள் ஏர் இந்தியா ஊழியர்கள் .

  MORE
  GALLERIES