தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில், வாரத்தின் மூன்றாவது நாளான இன்று விலை சற்று குறைந்துள்ளது.
2/ 6
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4815 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4825 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 10 குறைந்துள்ளது.
3/ 6
அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 38,600-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 80 குறைந்து ரூ.38,520-க்கு விற்பனையாகிறது.
4/ 6
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4815 விற்பனை செய்யப்படுகின்றது.
5/ 6
தங்கத்தின் விலையானது குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 71.30-க்கு விற்பனையான நிலையில் இன்று 0.50 காசுகள் குறைந்து ரூ. 70.80-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
6/ 6
நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 72 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 80 விலை குறைந்துள்ளது.