தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வந்தது. கடந்த 16-ந்தேதி 1 சவரன் தங்கம் ரூ.39,760-க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் நேற்று முன் தினம் 1 பவுன் ரூ.39,168-க்கு விற்றது. இந்த நிலையில் நேற்று தங்கம் சவரனுக்கு ரூ.280 அதிகரித்து 1 பவுன் தங்கம் ரூ.39,448-க்கு விற்கப்பட்டது.