தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்தை கண்ட நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. நேற்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.70 உயர்ந்த நிலையில், இன்று மேலும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்து 5,560 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.160 வரை உயர்ந்து ரூ.44,480 ஆகவும் விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.16 உயர்ந்து 4554 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.128 வரை உயர்ந்து ரூ.36,432 ஆகவும் விற்பனையாகிறது. வெள்ளி கிராம் ஒன்றிற்கு 30 பைசா உயர்ந்து ரூ.75.70 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.75,700 என விற்பனையாகிறது.