முகப்பு » புகைப்பட செய்தி » வணிகம் » சவரனுக்கு ரூ.2432 சரிவு கண்ட தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிப்ரவரி மாதம்!

சவரனுக்கு ரூ.2432 சரிவு கண்ட தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிப்ரவரி மாதம்!

Gold Rate : பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தங்கத்தின் விலை உச்சத்துக்கு சென்றது. கிட்டத்தட்ட ஒரு கிராம் ரூ.5500ஐ தாண்டியது. அதேவேளையில் இந்த மாதம் முடிவடைய உள்ள நிலையில் தங்கத்தின் விலையில் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

  • 15

    சவரனுக்கு ரூ.2432 சரிவு கண்ட தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிப்ரவரி மாதம்!

    நிலையான மதிப்பு கொண்டுள்ள தங்க நகைகளை வாங்குவதில் எந்தத் தவறுமே இல்லை. ஆனால், எந்த சமயத்தில் தங்கத்தின் மதிப்பு சீரான அளவில் இருக்கும் என்று நாம் கணித்து வாங்குவதில்லை. சில சமயம் தங்கத்தின் விலை கிடுகிடுவென்று உயர்ந்து உச்சத்தில் இருக்கும். அந்த சமயத்தில் நாம் தங்கம் வாங்குவது நமக்கு இழப்பை ஏற்படுத்துவதாக அமையும்.

    MORE
    GALLERIES

  • 25

    சவரனுக்கு ரூ.2432 சரிவு கண்ட தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிப்ரவரி மாதம்!

    உதாரணத்திற்கு கடந்த ஜனவரி மாதத்தில், இதுவரை இல்லாத உச்சமாக, 24 காரட் தரம் கொண்ட 10 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.57,000 வரை தொட்டது. தற்போது கூட ஒரு கிராம் ரூ.5,700 என்ற அளவிலேயே நீடிக்கிறது. வாடிக்கையாளர்கள் வாங்கக் கூடிய 22 காரட் தரம் கொண்ட தங்கமும் ஒரு கிராம் ரூ.5,300க்கு மேற்பட்ட விலையிலேயே விற்பனையாகி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 35

    சவரனுக்கு ரூ.2432 சரிவு கண்ட தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிப்ரவரி மாதம்!

    குறிப்பாக 2023 பிப்ரவரி மாதத்தில் தங்கத்தின் விலை உச்சம் வரை சென்றது. பிப்ரவரி 3ம் தேதி தங்கத்தில் விலை கிராமுக்கு ரூ.5415க்கு விற்பனையானது. பட்ஜெட் தாக்கத்தால் விலை உச்சத்துக்கு சென்றது. அது அடுத்தடுத்த நாட்களில் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.

    MORE
    GALLERIES

  • 45

    சவரனுக்கு ரூ.2432 சரிவு கண்ட தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிப்ரவரி மாதம்!

    இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 9 குறைந்து 5,201 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 72 ரூபாய் வரை குறைந்து 41,608 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 3 மற்றும் பிப்ரவரி 27 ஆகிய தினங்களை ஒப்பிட்டால், கிட்டத்தட்ட பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2432 குறைந்துள்ளது. விஷேச மாதம் நெருங்கி வரும் நிலையில் தங்கம் விலை சரிவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 55

    சவரனுக்கு ரூ.2432 சரிவு கண்ட தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிப்ரவரி மாதம்!

    இப்போது விலை குறைந்தாலும், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நெருங்குவதற்குள் தங்கத்தின் மதிப்பு மென்மேலும் அதிகரித்திருக்கும் என்று நிபுணர்கள் பலர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நிதி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த நிஷா ஹர்ஷேகர், “கடந்த சில மாதங்களில் மற்ற அனைத்து பொருட்களை காட்டிலும் தங்கத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிந்து வரும் நிலையில், 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.63,000 வரை அதிகரிக்கலாம். அதற்கு அடுத்த சில மாதங்களில் மீண்டும் ரூ.53,000 வரை இறங்கலாம்’’ என்று கூறினார்.

    MORE
    GALLERIES