முகப்பு » புகைப்பட செய்தி » கிரெடிட் கார்டு மூலம் போலியாக வாடகை செலுத்துதல்..! என்ன பிரச்னைகள் வரும்.. முழு தகவல்கள் இதோ..

கிரெடிட் கார்டு மூலம் போலியாக வாடகை செலுத்துதல்..! என்ன பிரச்னைகள் வரும்.. முழு தகவல்கள் இதோ..

தற்போதுள்ள கால கட்டத்தில் டெபிட் கார்டு போலவே, கிரெடிட் கார்டும் பலருக்கு அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இதனைப் பயன்படுத்துவதில் பல சௌகரியங்கள் இருப்பதோடு, இதனை பயன்படுத்துவதன் மூலம் நமக்கு ரிவார்ட்ஸ், கேஷ்பேக்ஸ், தள்ளுபடி என பல சலுகைகளும் எளிதில் கிடைக்கின்றன.

 • 19

  கிரெடிட் கார்டு மூலம் போலியாக வாடகை செலுத்துதல்..! என்ன பிரச்னைகள் வரும்.. முழு தகவல்கள் இதோ..

  கிரெடிட் கார்டு மூலம் போலியாக வாடகை செலுத்துதல்: மக்கள், குறிப்பாக 1980 அல்லது 1990 இல் பிறந்தவர்கள் இன்னும் அதிக ரிவார்ட்ஸ் மற்றும் கேஷ்பேக் போன்றவற்றைத் தட்டிச் செல்லும் நோக்கத்துடன் தங்கள் கிரெடிட் கார்டு ரிவார்டு சிஸ்டத்தை திறம்பட கையாள பல்வேறு யுக்தி மற்றும் தந்திரங்களை பயன்படுத்துகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 29

  கிரெடிட் கார்டு மூலம் போலியாக வாடகை செலுத்துதல்..! என்ன பிரச்னைகள் வரும்.. முழு தகவல்கள் இதோ..

  தற்போதுள்ள கால கட்டத்தில் டெபிட் கார்டு போலவே, கிரெடிட் கார்டும் பலருக்கு அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. இதனைப் பயன்படுத்துவதில் பல சௌகரியங்கள் இருப்பதோடு, இதனை பயன்படுத்துவதன் மூலம் நமக்கு ரிவார்ட்ஸ், கேஷ்பேக்ஸ், தள்ளுபடி என பல சலுகைகளும் எளிதில் கிடைக்கின்றன. டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சியின் காரணமாக இந்தியாவில் கிரெடிட் கார்டின் பயன்பாடு தற்போது வேகமாக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 39

  கிரெடிட் கார்டு மூலம் போலியாக வாடகை செலுத்துதல்..! என்ன பிரச்னைகள் வரும்.. முழு தகவல்கள் இதோ..

  அனைத்து செலவுகளையும் உங்கள் கிரெடிட் கார்டின் மூலம் நிர்வகிக்கும் போது ரிவார்டு பாயிண்ட்ஸ், கேஷ்பேக்ஸ் என உங்கள் செலவுகளை சமாளிப்பதோடு கிரெடிட் கார்டின் மூலம் பணத்தை மிச்சமும் பிடிக்கலாம். இதனால் மக்கள், குறிப்பாக 1980 அல்லது 1990 இல் பிறந்தவர்கள் இன்னும் அதிக ரிவார்ட்ஸ் மற்றும் கேஷ்பேக் போன்றவற்றைத் தட்டிச் செல்லும் நோக்கத்துடன் தங்கள் கிரெடிட் கார்டு ரிவார்டு சிஸ்டத்தை திறம்பட கையாள பல்வேறு யுக்தி மற்றும் தந்திரங்களை பயன்படுத்துகின்றனர். இந்த தந்திரத்தில் பொதுவாக அவர்கள் செய்வது, தங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு போலியாக வாடகை செலுத்துவது ஆகும்.

  MORE
  GALLERIES

 • 49

  கிரெடிட் கார்டு மூலம் போலியாக வாடகை செலுத்துதல்..! என்ன பிரச்னைகள் வரும்.. முழு தகவல்கள் இதோ..

  பல தளங்கள் இப்போது வீட்டு உரிமையாளர்களுக்கு தங்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி குறைந்தபட்ச கட்டணம் செலுத்தி (பொதுவாக வாடகைத் தொகையில் 1%) தங்கள் மாதாந்திர வாடகையைச் செலுத்த அனுமதிக்கின்றன. அவ்வாறு செய்யும் போது, உங்கள் பணம் நேரடியாக உரிமையாளரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். அதோடு, இது பரிசுகளை அல்லவும் சுமார் 45 நாட்களுக்கு வட்டி இல்லாத கிரெடிட் காலத்தை அனுபவிப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. ஆனால், அதற்காக நீங்கள் போலியாக வாடகை செலுத்தினால், அதன் விளைவாக என்னென்ன நேர வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 59

  கிரெடிட் கார்டு மூலம் போலியாக வாடகை செலுத்துதல்..! என்ன பிரச்னைகள் வரும்.. முழு தகவல்கள் இதோ..

  மக்கள் ஏன் கிரெடிட் கார்டின் மூலம் போலியாக வாடகை செலுத்துகின்றனர்? : மக்கள் கிரெடிட் கார்டின் மூலம் போலியாக வாடகை செலுத்துவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அவற்றில் சில பின்வருமாறு : வரி விலக்கு பெற, கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி அதிக ரிவார்டு பாயிண்ட்ஸ், கேஷ்பேக் அல்லது ஏர்மைல்களைப் பெற, கிரெடிட் கார்டு செலவு இலக்குகளை பூர்த்தி செய்ய, வணிக நோக்கங்களுக்காக கிரெடிட் கார்டு கடன் வரம்புகளை வங்கி கணக்கு பேலன்ஸாக மாற்றுவதற்கு, நிதி நெருக்கடி இருக்கும் பட்சத்தில் கிரெடிட் கார்டு வரம்புகளை வங்கிக்கணக்கிற்கு மாற்றுவதற்கு 

  MORE
  GALLERIES

 • 69

  கிரெடிட் கார்டு மூலம் போலியாக வாடகை செலுத்துதல்..! என்ன பிரச்னைகள் வரும்.. முழு தகவல்கள் இதோ..

  கிரெடிட் கார்டின் மூலம் போலியாக வாடகை செலுத்துவதால் என்னென்ன பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது? வரி சலுகை மோசடி: முதலாவதாக, போலியாக வாடகை செலுத்துவதும், மோசடியான வாடகை ரசீதுகளைச் சமர்ப்பித்து வரி விலக்குகளைப் பெறுவதும் சட்டவிரோதமான செயல் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற முறைகேடுகளை வருமான வரித்துறை தீவிரமாக கண்காணித்து, வரி ஏய்ப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கும் சாத்தியங்கள் உள்ளன. நோட்டீஸ் அனுப்பப்பட்டால் மதிப்பீட்டு அதிகாரி கோரப்பட்ட விலக்குக்கான ஆதாரத்தைக் கேட்பார். தேவையான ஆவணங்களை வழங்கத் தவறும் பட்சத்தில், விலக்கு அளிக்கப்படாமல் போகலாம். அதோடு போலி பில்களை வேண்டுமென்றே சமர்ப்பித்தால் I-T சட்டத்தின் பிரிவுகள் 234A, 234B மற்றும் 234C ஆகியவற்றின் கீழ் 200% அபராதம் மற்றும் வட்டியும் விதிக்கப்படும்.

  MORE
  GALLERIES

 • 79

  கிரெடிட் கார்டு மூலம் போலியாக வாடகை செலுத்துதல்..! என்ன பிரச்னைகள் வரும்.. முழு தகவல்கள் இதோ..

  வாடகையை வருமானமாக அறிக்கை செய்தல் : உங்கள் நண்பர் அல்லது குடும்ப உறுப்பினர் போலியாக வாடகையைப் பெற்றுக் கொள்ளும் பட்சத்தில், அவர்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்யும் போது, பெறப்பட்ட தொகையை அவர்களின் வருமானமாக காட்ட வேண்டும். ஏனென்றால், ஒரு நிதியாண்டில் ஒருவர் பெற்றுக் கொள்ளும் வாடகை 1 லட்சத்திற்கும் மேலாக இருந்தால், வருமான வரி தாக்கல் செய்யும் போது உரிமையாளரின் பான் கார்டு எண்ணை உள்ளிட வேண்டும். மேலும், வருமான வரி தாக்கல் செய்யும் போது வாடகை மூலமாக பெறப்பட்ட வருமானம் காட்டப்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், வருமான வரி நோட்டீஸ் வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

  MORE
  GALLERIES

 • 89

  கிரெடிட் கார்டு மூலம் போலியாக வாடகை செலுத்துதல்..! என்ன பிரச்னைகள் வரும்.. முழு தகவல்கள் இதோ..

  வாடகையில் TDS பிடித்தம் : செலுத்தப்பட்ட வாடகை ஒரு குறிப்பிட்ட வரம்பைத் தாண்டி இருக்கும் பட்சத்தில், உரிமையாளர் வருமான வரிச் சட்டத்தின் 194-IB பிரிவின் கீழ் 10% விகிதத்தில் வரிப் பிடித்தம் செய்ய வேண்டும். தணிக்கை வழக்குகளுக்கு ஆண்டு முழுவதும் செலுத்தப்பட்ட அல்லது செலுத்த எதிர்பார்க்கப்படும் மொத்த வாடகை ₹2.4 லட்சத்திற்கும், தணிக்கை அல்லாத வழக்குகளுக்கு மாதத்திற்கு ₹50,000-க்கும் அதிகமாக இருந்தால், வாடகை செலுத்துபவர் வருமான வரிச் சட்டத்தின் 194I பிரிவின் கீழ் TDS பிடித்தம் செய்ய வேண்டும். இவ்வாறு, ஒரு மாதத்திற்கு ₹2.4 லட்சம் (தணிக்கை) ₹50,000 (தணிக்கை அல்லாதது) என்று விதிக்கப்பட்ட வரம்பானது ஒவ்வொரு சொத்துக்கும் அல்ல, ஒவ்வொரு பணம் பெறுபவருக்கும் பொருந்தும்.

  MORE
  GALLERIES

 • 99

  கிரெடிட் கார்டு மூலம் போலியாக வாடகை செலுத்துதல்..! என்ன பிரச்னைகள் வரும்.. முழு தகவல்கள் இதோ..

  வாடகையில் வரிப் பிடித்தம் அவசியமா? : நிறுவனங்கள், அறக்கட்டளைகள் அல்லது சங்கங்கள், மற்றும் தனிநபர்கள் அல்லது HUFகள் என கணக்கு தணிக்கை செய்யப்பட்ட வணிகத்தில் ஈடுபட்டுள்ள பணம் செலுத்துபவர்கள், வாடகை ₹2.4 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தால், TDS பிடித்தம் செய்ய வேண்டும். மேலுள்ள பிரிவின் கீழ் இல்லாத தனிநபர்கள் மற்றும் HUFகள் மாதத்திற்கு ₹50,000-க்கு மேல் செலுத்தப்பட்ட வாடகை இருக்கும் பட்சத்தில் 5% TDS பிடித்தம் செய்ய வேண்டும். ரிவார்ட்ஸ் மற்றும் கேஷ்பேக் போன்றவற்றைத் தட்டிச் செல்ல நாம் சட்டவிரோதமாக செயல்படுவது முற்றிலும் தவறு. இதன் விளைவாக நாம் பெரும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. எனவே, நாம் நடைமுறையில் உள்ள வருமான வரி சட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவது அவசியம் ஆகும். இது குறித்து மேலும் சந்தேகங்கள் அல்லது கேள்விகள் இருந்தால், பட்டயக் கணக்கறிஞர்களின் உதவியை நாடி பயன் பெறலாம்.

  MORE
  GALLERIES